Breaking News

குயின்ஸ்லாந்தில் ஒரே நாளில் புதிதாக 186 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

New restrictions have been announced as 186 people were newly diagnosed with corona infection in a single day in Queensland.

குயின்ஸ்லாந்தில் ஒரு நாளில் அதிகபட்ச தொற்று எண்ணிக்கையாக 186 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

New restrictions have been announced as 186 people were newly diagnosed with corona infection in a single day in Queensland, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதன்மை சுகாதாரத்துறை அதிகாரி ஜான் ஜெரார்ட் 79 பேர் மருத்துவமனையிலும், 112 பேர் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 29902 நபர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாகாணத்தில் 89.9% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 85% பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் ஒவ்வொருவருக்கும் தொற்று எவ்வாறு வந்தது என்பதை கண்டறிவது கடினம் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஜெரார்ட் தெரிவித்துள்ளார். மாகாணத்தில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா கண்டறியப்பட்டு வருவதாகவும், ஏராளமானவர்கள் இன்னும் கண்டறியப்படாமல் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இதன் காரணமாக பிரிமீயர் Asnnatacia Palaszsczuk பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகளில் உள்ள பணியாளர்கள் நாளை காலை முதல் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை பணியாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

New restrictions have been announced as 186 people were newly diagnosed with corona infection in a single day in Queenslandமேலும் தகுதிவாய்ந்த நபர்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்று பிரிமீயர் Asnnatacia Palaszsczuk தெரிவித்துள்ளார். மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 15 ஆயிரம் பேர் மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும், இன்னும் ஏராளமானவர்களுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக இருந்தாலும், அவர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பிற மாகாணங்களில் இருந்து வருபவர்கள், 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி ஆர் சோதனை அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை புத்தாண்டு வரை நீடிக்கும் என்றும் பிரிமீயர் Asnnatacia Palaszsczuk தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/32i9bWO