Breaking News

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரைகளின் போது தங்களுடைய தலைமைத்துவத்தை நிரூப்பிக்காமல் பிரச்னைகளை மட்டுமே பேசி வருவதாக அரசியல் வல்லுநர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

Some political experts have noted that the main candidates for the PM's job are only talking about issues without proving their leadership during the election campaign.

ஆஸ்திரேலியாவில் இன்னும் 3 வாரங்களில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே வாக்களாளர்களில் பலர் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து முடிவு செய்துவிட்டாலும், முதல் தலைமுறை வாக்காளர்களிடம் இன்னும் தயக்கநிலையே நிலவுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்தில் வாக்களிப்போர் சமூக பொறுப்புணர்வுடன் செயல்படுவார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதனை தீர்க்கும் விதமாக அடுத்த அமையவுள்ள மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டும். அரசியல் அறிவுடன் கூடிய செயல்பாடுகளுக்குள் புதிய தலைமுறையினரை உட்படுத்த வேண்டும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர்.