Breaking News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிட்னியின் தென்மேற்கு பகுதியான ஹால்டன் வீதி திருவிழாக் கோலம் கொண்டு ஜொலிக்கின்றன.

Haldon Street in southwestern Sydney is abuzz with festivities ahead of Ramadan.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள லேகம்பாவில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையின் போது அரபு பண்பாடு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

Haldon Street in southwestern Sydney is abuzz with festivities ahead of Ramadanநடப்பாண்டு ரம்ஜானை முன்னிட்டு லேகம்பாவிலுள்ள ஹால்டன் வீதி திருவிழா போல காட்சியளிக்கின்றன. உணவுப் பொருட்கள், திண்பண்டங்கள், அரபு உணவுகள், என பல்வேறு விற்பனைகங்கள் இந்த வீதியில் உருவாக்கப்பட்டுள்ளன. ரமலான் நோண்பு துவங்கப்பட்டத்தில் இருந்து இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஹால்டன் வீதி ரமலான் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த வார இறுதியுடன் ரமலான்
முடிவடைகிறது. அதை முன்னிட்டு ஞாயிறன்று ஹால்டன் வீதி ரமலான் கொண்டாட்டமும் நிறைவு பெறுகிறது.

இஸ்லாம் மத பண்டிகையாக இருந்தாலும், ஆஸ்திரேலியர்கள் பலரிடமும் ஹால்டன் வீதி ரமலான் கொண்டாட்டம் வரவேற்பு பெற்றுள்ளது. இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களை விடவும், மற்றவர்கள் தான் இம்முறை ரமலான் கொண்டாட்டத்தில் விருந்தினர்களாக கலந்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.