Breaking News

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மகாணத்தில் 2019ம் நடைபெற்ற கார் விபத்து தொடர்பாக Mildura வைச் சேர்ந்த ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை : விபத்தில் தாய், மகள் உயிரிழந்த நிலையில் தண்டனை பெற்றவர் நாடு கடத்தப்படவும் வாய்ப்பு

Mildura man sentenced to 3 years in prison for car crash in 2019 in Victoria, Australia

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வடகிழக்கு விக்டோரியாவின் Robinvale அருகில் உள்ள Murray Valley Highway பகுதியில் Mildura வைச் சேர்ந்த Tharanga Ehalape-Gamage தவறான பாதையில் கார் ஓட்டிச் செல்லப்பட்ட நிலையில் மற்றொரு வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் அவரது தாய் மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவரது மகன் லோசன காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால், சிறுவனுக்கு விபத்துக்கு பிந்தைய மன உளைச்சல், அச்சம் உள்ளிட்டவை நீடித்து வருவதாக விசாரணையில் தெரியவந்தது. மேலும், எதிரே வந்த வாகனத்தின் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

Mildura man sentenced to 3 years in prison for car crash in 2019 in Victoria, Australia.2021 டிசம்பர் மாதம் Country Court நீதிமன்றத்தில் விசாரணையின் போது விபத்துக்கான காரணம் முழுதும் தவறான பாதையில் வேகமாக வாகனத்தை இயக்கியது தான் என்றும், Tharanga Ehalape-Gamage குற்றவாளி என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான உரிய விளக்கம் எதுவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை என்றும், மது போதைப்பொருள் எதுவும் அவர் பயணத்தின் போது பயன்படுத்தவில்லை என்றும், இந்த விபத்திற்கு பெரிதும் வருந்துவதாக Tharanga Ehalape-Gamage தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு மிகவும் துக்ககரமானது என்று நீதிபதி Fran Dalziel தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்காக அவர் நாடுகடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் வளர்ந்த Tharanga Ehalape-Gamage 2012ம் ஆண்டு விக்டோரியா மாகாணத்தின் Mildura நகரத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். தற்போது சிறை தண்டனை காரணமாக அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.

விசா ரத்து செய்யப்பட்டதை மறு பரிசீலனை செய்ய தான் உத்தரவிடுவதாக Country Court நீதிபதி Fran Dalziel தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிர் தப்பிய அவரது மகன் Tharanga Ehalape-Gamage வின் முன்னாள் மனையிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.