Breaking News

மெல்பர்ன் காற்றில் புகை வாசனை!

மெல்பர்னில் கடந்த சில நாட்களாக பலரும் வியக்கும் அளவிற்கு காற்றில் புகை வாசனை வீசுகிறது.

VicEmergency-இன் படி மெல்பர்ன் மற்றும் Mornington தீபகற்பத்தில் இருக்கும் மக்கள் விக்டோரியாவில் பல இடங்களில் திட்டமிட்டு பொருட்களை எரிப்பதால், புகையை பார்க்கவும் அல்லது வாசனையை நுகரவோ முடிகிறது. நேற்று மதியம் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதனால் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என குறிப்பிட்டிருந்தது.

Kinglake-ற்கு அருகே Glenburn-ன் 4 கி.மீ கிழக்கே 604 ஹெக்டேருக்கு மேல் நேற்று மதியம் திட்டமிட்டு தீயிட்டுள்ளனர். மற்றொன்று 14 கி.மீ. Noojeeயின் வடக்கிலும்,
Neerimன் கிழக்கிலும் இன்னும் தீ எரிந்து கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி Gisborne ற்கு அருகே 2 கி.மீ Blackwoodன் வடக்கிலும், 1200 ஹெக்டேருக்கு மேல் எரிந்துள்ளது. மற்றொன்று Ararat க்கு அருகில் 11 கி.மீ Raglanற்கு வடக்கே எரிந்து வருகிறது.

VicEmergency தன்னுடைய வலைதளத்தில் நீங்கள் மெல்பர்னின் பல நகரங்களிலும் மற்றும் Mornington தீபகற்பதிலும் பல பகுதிகளில் புகையை பார்க்க முடிகிறது. இந்த புகை பல தனியார் சொத்துக்கள் மற்றும் பொது இடங்களில் திட்டமிடப்பட்ட எரித்தலால் புகை வருகிறது.

அடர்ந்த காட்டுப்பகுதியில் ஏற்பட கூடிய தீ விபத்தை பட்டமரம், இலைக்குப்பை, பட்டை மற்றும் புதர்களை அகற்றுவதன் மூலம் இந்த விபத்தை தவிர்க்கலாம்.
Environmental Protection Authority (EPA) தன்னுடைய வலைதளத்தில் தற்பொழுது மெல்பர்னின் CBD-இ ன் காற்றின் தரம் மிகவும் நன்றாக உள்ளது என்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் யாருக்கேனும் மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் Triple Zero (000) என்ற எண்ணை அழைக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.