Breaking News

கடை பாதுகாப்பில் அலட்சியம் ..காயமடைந்த குழந்தையின் தாய் சரமாரி கேள்வி !

Neglect of Kmart safety Injured child mother raised nonstop questions

கடையின் பாதுகாப்பில் முக்கியம் செலுத்தாத நிர்வாகத்திடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார் விக்டோரியாவை சேர்ந்த ஒரு பெண் . வர்த்தக நிறுவனமான Kmart-ல் தனது மகன் ஆடை ரேக் கொக்கி மூலம் காயமடைந்ததைத் தொடர்ந்து,வாக்குறுதி அளிக்கப்பட்ட பாதுகாப்புகளை ஏன் செயல்படுத்தப்படவில்லை என நிறைவாகத்திடம் கேள்வி எழுப்பினார் .

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று Kmart-ன் டெலிகோம்பே கடையில் Kirsty Colbert தனது மகன் Alexander உடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. Kmart நாடு முழுவதும் கொக்கிகள் மீது பிளாஸ்டிக் அட்டைகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் Covid-19 ஊரடங்கில் எல்லைகள் மூடப்பட்டிருந்ததால் தாமதங்கள் ஏற்பட்டதாக கூறுகின்றனர்.

இந்த விபத்து குறித்து , Colbert கூறுகையில், தனது மகனுக்கு வெட்டுக்காயங்கள் மற்றும் முக வீக்கத்துடன் இருந்தது, மேலும் தனது மகனின் காதின் ஓரத்தில் கொக்கி அவரது முகத்தை தாக்கியது. மேலும் தன் மகனின் முகத்தின் ஓரத்தில் எல்லா இடங்களிலும் ரத்தம் வந்தது என கூறினார். கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்துவிட்டதாக கவலையுடன் கூறினார்.

Neglect of Kmart safety Injured child இதுபோன்ற பல விபத்துகள் நடந்துள்ளதாக பலர் கூறுகின்றனர். அந்த கடையில் கொக்கிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றனர் எனவும், குழந்தைகளின் கண்மட்டத்தில் ஆபத்து நிறைந்த பொருட்கள் இருப்பதாகவும் பலர் குற்றம் சாட்டுகின்றனர். பல முறை அந்த ஆபத்தான கருவிகளை நீக்கும் படி பலர் கூறியதாகவும் தெரிகிறது.ஆனால் இன்னும் எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பலரும் குற்றம் சாற்றுகின்றதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ,Kmart-ன் செய்தி தொடர்பாளர் கூறுகையில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு அதிக முன்னுரிமை என கூறினார். மேலும் காயங்கள் மிகவும் பெரிய அளவில் இல்லை என மகிழ்ச்சி அடைகிறோம். இது சுற்றியுள்ள பாதுகாப்பு அபாயங்களை வலுப்படுத்துகிறது. அதனால் தான் தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள எங்கள் கடைகளில் இருக்கும் அனைத்து ஆடைகளிலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வெளியிடுகிறோம் எனக் கூறினார்.