Breaking News

சிரோஜா புயல் மேற்கு ஆஸ்திரேலியாவின் கல்பாரி பகுதியில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Seroja Cyclone has caused severe damage in the Kalbarri region of Western Australia

கல்பாரி பகுதியில் இருந்த 70% கட்டடங்கள் இப்புயலால் கடும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Northampton மற்றும் Kalbarri பகுதிகளுக்கு புயல் அபாயம் நீங்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புகழ்பெற்ற சுற்றுலா தளமான Murchison ஆற்று முகப்பு பகுதியில் புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Seroja Cyclone has caused severe damage in the Kalbarri region of Western Australia 1இப்பகுதியில் 170 கிமீ வேகத்தில் வீசிய புயல்காற்றால் சுமார் 30,500 குடியிருப்புகளுக்கு மின் தடை ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. வீடுகளுக்கு துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீண்டும் வழங்க பல நாட்களாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைப்பேசி சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையங்கள், பூங்காக்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது.

Seroja Cyclone has caused severe damage in the Kalbarri region of Western Australia 2புயலின் போது வெடிகுண்டு வீசப்பட்டதை போல உணர்ந்ததாகவும், வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்ததை பார்த்ததாகவும் நகரவாசிகள் தங்கள் அனுபவங்களை பயத்துடன் விவரிக்கின்றனர். புயல் எச்சரிக்கையை பயன்படுத்தி சிலர் மின்னணு கடைகளை கொள்ளையடித்துள்ளனர்.

புயல் பாதிப்பின் போது ஏராளமான அவசர அழைப்புகள் வந்ததாக கல்பாரி பகுதியின் அவசர சேவை பிரிவு மேலாளர் ஸ்டீவ் கேபிள் தெரிவித்துள்ளார்.

புயல் சேதவிவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த தீயனைப்பு மற்றும் அவசர பிரிவு ஆணையர் Darren Klemm நகரில் 70% வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் 30% வீடுகள் கடுமையான சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்