Breaking News

தமிழகத்தில் கொரோனா தொற்று 6 ஆயிரத்து 618 ஆக உயர்வு. கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை.

சுகாதரத்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ஒரே நாளில் கொரொனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6,618 ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,93,434 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு நாள் தொற்று 2124 ஆன நிலையில் மொத்த எண்ணிக்கை 2,65,125 ஆனது.

2314 பேர் ஒரே நாளில் குணமடைந்தை அடுத்து ஒட்டுமொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,78,571 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4494 பேருக்குத் தொற்று உள்ளது. இதனிடையே கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 22 பேர் ஒரே நாளில் உயிரிழந்த்தை அடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12,908 ஆக அதிகரித்துள்ளது.

Corona infection rises to 6,618 in Tamil Nadu. Chief Minister-led consultation today on increasing restrictionsதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் 41,955 பேர் ஆகும். இதுவரை கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,89,603. ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 87,767. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 35 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 38,86,674.

இதனிடையே, தமிழகத்தில் தொற்று அதிகரித்து வருவதை் தொடர்ந்து கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமயில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.