Breaking News

பொதுமக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக 24 மணிநேரம் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்கிற உக்ரைன் விடுத்த கோரிக்கையை ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஏற்றுக்கொண்டுள்ளார்.

Russia's foreign minister has agreed to a 24 - hour ceasefire to allow civilians to leave.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இருவரும் துருக்கி நாட்டின் அண்டாலயா என்கிற இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எதில் எந்தவிதமான உடன்பாடும் எட்டப்படவில்லை.

Russia's foreign minister has agreed to a 24 - hour ceasefire to allow civilians to leave..இதுதொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ட்மைட்ரோ குலேபா, உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியான மரியுபோலில் மிகவும் நெருக்கடியான சூழல் நிலவுகிறது. மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள மக்கள் வெளியேறும் வரை போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அதை நிராகரித்துவிட்டார். அதனால் உடன்படுதலில் எவ்விதம் முன்னேற்றமும் பேச்சுவார்த்தையில் எட்டப்படவில்லை என்று கூறினார்.

இந்நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ பேசுகையில், ரஷ்ய படை பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் நாடு கூறுவது முற்றிலும் தவறு. சொந்த குடிகளின் மீது உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கிளியர்ச்சியாளர்கள் தான் தாக்குதல் நடத்துகின்றனர் என்றார்.

இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறிப்பிட்ட மரியுபோல் பகுதியில் இருந்து குடிகள் வெளியேற ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஒப்புக்கொண்டுள்ளது. அதுவரை போரை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை உக்ரைனில் இருந்து 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறி இருப்பதாக ஐ.நா சபை தகவல் தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3pWbqYr