Breaking News

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி வெற்றி பெறும் பட்சத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கும் என எதிர்க்கட்சி தலைவர் Anthony Albanese உரை : சீனா தொடர்பான வெளியுறவுக் கொள்கைளிலும் மாற்றம் கொண்டு வருவோம் என பேச்சு

தேர்தலை எதிர்கொண்டு ஆஸ்திரேலியாவில் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில் Lowy Institute -ல் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் Anthony Albanese, தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான அரசின் திவறான அணுகுமுறைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசினார்.

தொழிலாளர் கட்சி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் என்றும், கப்பற்படை, பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் Anthony Albanese கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான விவாதங்களில் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாக கூட்டணி அரசு குற்றம்சாட்டிய நிலையில் எதிர்க்கட்சித் தலைவரின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Opposition leader Anthony Albanese has called for more funding for national security and the military if the Labor Party wins in Australia..தேசிய பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்குவதாகவும், இந்த விவகாரத்தில் இறையாண்மைக்கு உட்பட்டு வெளியுறவு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், சீனா விவகாரத்தில் கூட்டணி அரசுக்கும் தொழிலாளர் கட்சி நிலைப்பாட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று Anthony Albanese தெரிவித்துள்ளார். தென் சீன கடல் பகுதி, தைவான், ஹாங்காங் உள்ளிட்ட பகுதிகளில் திபெத்தியர்களுக்கு எதிரான மனித உரிமை பிரச்சனைகளை கையாளுவதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை என்றும், முந்தைய தொழிலாளர் கட்சி அரசுகளை விட தாங்கள் சிறப்பாக கையாள முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் Anthony Albanese கூறினார்.

இதனிடையே எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு பதிலளித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் Peter Dutton, ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது போன்ற தோற்றத்தை Anthony Albanese ஏற்படுத்த முயல்வதாகவும், சீனா மற்றும் ரஷ்யாவை போல ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எதிலும் நாம் ஈடுபடவில்லை என்பதை வாக்காளர்கள் நன்கு அறிவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3Cy6NZu