Breaking News

ஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தில் குழந்தைகள் மீதான முறைகேடு தொடர்பான ஆவணங்களை பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்ட கல்லூரி பேராசிரியர் : போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிப்பு

சிட்னி மாகாணத்தில் உள்ள கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக உள்ள Cody Michael Reynolds குழந்தைகள் முறைகேடு தொடர்பாக தகவல்களை பகிர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் அவரது இரண்டு செல்போன்கள் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களை வைத்திருந்தவை மற்றும் அவற்றை பகிர்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. மேலும் அவற்றை பிரசுரித்து, பரப்பும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் Cody Michael Reynolds மீது புகார்கள் எழுந்துள்ளன.

போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் காணொலி வாயிலாக சிட்னி மத்திய நீதிமன்றத்தில் முன் ஆஜர்படுத்தப்பட்டார். தரப்பு வழக்கறிஞர் பிணை கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில் அவருக்கு பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

College professor accused of sharing child abuse documents in Sydney, Australia. Arrested by police and released on bail.மேலும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப் –ல் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்த உள்ளதாகவும், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ரிமோட் ஆக்சஸ் முலமாக ஆதாரங்களை அழிக்கும் நடவடிக்கைகளை முன்னாள் ஆங்கிலத்துறை தலைவர் Cody Michael Reynolds மேற்கொள்வார் என்பதால் அதனை பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சிட்னி காவல்துறை தெரிவித்துள்ளது.

Cody Michael Reynolds மன அழுத்தம் மற்றும் பதட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளதாகவும் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

18 வயதுக்கு கீழ் உள்ள நபர்கள் யாரும் அவருடன் தங்கக் கூடாது என்றும், பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டு தினமும் காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி பிணைக்கான நிபந்தனைகளில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அவரது இல்லத்தின் அருகில் வசிக்கும் நபர்கள் மற்றும் சிறுவர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து மே மாதத்தில் வழக்கு விசாணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/34wJin8