Breaking News

உக்ரைனில் தொடரும் ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் : மேற்குலக நாடுகள் ராணுவ தளவாடங்களை அளித்து உதவ வேண்டும் என்று உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy கோரிக்கை

Russian military strike in Ukraine. Ukrainian President Volodymyr Zelensky urges Western nations to provide military equipment,

32 நாட்களை கடந்துள்ள நிலையில் உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்துவதற்கான எந்த சூழலும் இல்லை.

உக்ரைனின் கீவ், கார்கிவ், லிவிவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்தையும் முழுவதுமாக சிதைக்கும் நோக்கில் குண்டுமழை பொழிந்து கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது ரஷ்யா.

லிவிவ் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் பாதுகாப்புத்துறை அலுவலங்கள் மீது ரஷ்ய ராணுவம் குறிவைத்து நடத்திய தாக்குதலில் அந்த பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளன.

குண்டு மழை காரணமாக தீ பிழம்பாக எரிந்து வரும் நிலையில் அவசர கால சேவை ஊழியர்கள் உடனடியாக எண்ணெய் கிடங்கு பகுதியில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனிடையே ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து வருவதன் காரணமாக உக்ரைனுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள் மற்றும் உதவிகளை வழங்குமாறு மேற்குலக நாடுகளை உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyy கேட்டுக்கொண்டுள்ளார்.

Russian military strike in Ukraine. Ukrainian President Volodymyr Zelensky urges Western nations to provide military equipmentஇதனிடையே மரியுபோல் நகரிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கான மனிதாபிமான வழித்தடங்களை அமைப்பதற்கு ரஷ்ய ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது மரிய போல் நகரிலிருந்து 2 வழித்தடங்கள் மூலமாக வாகனங்களில் மக்கள் வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ சம்மதம் தெரிவிக்க பட்டுள்ளதாகவும் துணை பிரதமர் Iryna Vereshchuk கூறியுள்ளார்.

இதனிடையே வடக்கு கிவிவ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றை ரஷ்ய ராணுவம் முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், ரஷ்யா அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் பாதிப்புகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்று உக்ரைனின் அணுசக்தி ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கார்கிவில், போர் துவங்கியது முதல், தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள அணுசக்தி ஆய்வு மையத்தின்மீது ஏற்கனவே குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில், அங்குள்ள கட்டடங்கள் சேதமடைந்தன.

அதில் இருந்து கதிர்வீச்சு எதுவும் அப்போது வெளிவரவில்லை.இந்நிலையில் மீண்டும் அந்த அணுசக்தி ஆய்வு மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதை உக்ரைன் நாட்டின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் நேற்று உறுதிபடுத்தி உள்ளது.

Link Source: https://ab.co/3iHxvG9