Breaking News

ஐரோப்பிய நாடுகளை பணிய வைக்க எரிவாயுவை வைத்து அரசியல் செய்யும் ரஷ்யா..!!

ரஷ்யா பல ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை குறைத்துள்ளதை அடுத்து, குறிப்பிட்ட நாடுகளில் ஆற்றலுக்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Russia uses gas to make European countries work

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகள் மீது, ரஷ்யா தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை உறுதி செய்யும் விதமாக தங்களிடம் இருந்து எரிவாயு பெறும் நாடுகளிடம், ரஷ்யா நாட்டு பணத்தை கட்டணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

Russia uses gas to make European countries work,இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போலாந்து, பல்கேரியா, ஃபின்லாந்து, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து நாடுளுக்கு ரஷ்யா எரிவாயு விநியோகத்தை நிறுத்திவிட்டது. உக்ரைனுக்கு தங்களுடைய ஒன்றுபட்ட ஆதரவை தெரிவிக்கும் விதமாக லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு பெறப்போவதில்லை என்று அறிவித்துள்ளன. பால்டிக் கடல்பரப்புக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள நார்டு ஸ்ட்ரீம் 1 என்கிற குழாய் வழியே ஜெர்மனிக்கு ரஷா எரிவாயுவை அனுப்பி வருகிறது. ஜெர்மனிக்கு வரும் எரிவாயு, மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பிரித்தளிக்கப்படுகிறது. இதுதவிர போலாந்து, பெலரஸ் வழியாகவும் எரிவாயு விநியோகத்தை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. தற்போது அவை நிறுத்தப்பட்டுவிட்டன. தற்போது குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளின் முடிவு பொதுமக்களை கவலையடைச் செய்துள்ளது.

வீட்டு பயன்பாடு, பல்வேறு தொழிற் செயல்பாடு உள்ளிட்டவற்றுக்கு எரிவாயுவின் தேவை இன்றியமையாததாக உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் உடனடியாக மாற்று ஆற்றலுக்கு மாறுவதும் சாத்தியமில்லாத ஒன்று. இருப்பிலுள்ள எரிவாயுவை பயன்படுத்த ஐரோப்ப நாடுகள் ஒன்றுகூடி முடிவு செய்துள்ளன. எரிவாயுவினை சிக்கனமாக செலவு செய்திட மக்களுக்கு அரசு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர். குளிர்காலம் தொடங்கவுள்ளதால் எரிவாயுவின் தேவை ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் தேவை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.