அண்மையில் விக்டோரியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பத்தினர் தங்களுடைய வீட்டை இழந்துவிட்டனர். அதற்காக அவர்கள் காப்பீட்டு தொகை பெற முயற்சிக்கும் போது, அவர்களுடைய முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கான காரணத்தை அவர்கள் தெரிந்துகொண்ட போது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
குறிப்பிட்ட குடும்பத்தினர், தங்களுடைய வீட்டின் முகவரியை பயன்படுத்தி பண்ணை முட்டை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். வாழும் வீட்டை நிறுவனமாக பதிவு செய்து வணிகம் செய்யக்கூடாது என்கிற விதியை காப்பீட்டு நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. அதன்காரணமாக விக்டோரியா குடும்பத்தினருக்கு காப்பீடு மறுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனால் வீட்டில் இருந்துகொண்டே ஊடாக சுயதொழில் நடத்தி வரு ஊழியர்களிடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மவுரிஸ் பிளாக்பர்ன் என்கிற வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி ஊழியர், உரிமையாளர் என்பதில் வேறுபாடு உள்ளது. அதனால் வீட்டில் இருந்து பணி செய்யும் ஊழியர், உரிமையாளராக மாற முயற்சிக்கும் போது, அதற்கான வழிமுறைகளை கேட்டு தெரிந்துகொள்வது நல்லது என்று கூறியுள்ளார்.
மேலும், காப்பீடு எடுக்கப்படும் போதோ அல்லது அது புதுப்பிக்கப்படும் போதோ, காப்பீட்டாளரிடம் தவறான தகவல்களை குறிப்பிடக் கூடாது. அதில் நியாயமான கவனிப்பு இருக்க வேண்டும். ஒருவேளை இதை மீறினால், காப்பீடு தொகை கிடைக்காது. வீட்டில் இருந்தே தொழில் துவங்கப்படும் போது, காப்பீடு கிடைப்பது மறுக்கப்பட்டால், காப்பீட்டாளரிடம் அதற்கான உரிய விளக்கத்தை அப்போதே கேட்டுவிடுவது நல்லது என்று தெரிவித்துள்ளார்.
இதனுடன், காப்பீட்டாளரால் வீட்டுக் காப்பீட்டுக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்றால், உடனடியாக அதை நிறுவனத்திடம் புகார் அளிக்க வேண்டும். அதற்கு நிறுவனம் 30 நாட்களுக்குள் உரிய விளக்கம் வேண்டும் என்பது விதி. ஒருவேளை நிறுவனம் வழங்கிய விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால், ஆஸ்திரேலிய நிதி புகார்கள் ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என்று வழக்கறிஞர் மவுரிஸ் பிளாக்பர்ன் கூறியுள்ளார்.