Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அதிகரிக்கும் தொற்று : பல்வேறு உணவு நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வாடிக்கையாளர்களுக்கு கூட்டாக அறிவுறுத்தல்

Rising epidemic in the state of New South Wales: Collective instruction to customers to follow the guidelines of various food companies

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் புதிய பகுதி டெல்டா வைரஸ் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை அங்கு முடக்கநிலை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை நியூ சவுத் வேல்ஸ் அரசு வெளியிட்டுள்ளது. உணவு, மருத்துவம், கல்வி, முதியோர் பராமரிப்பு, விளையாட்டு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வரவேண்டும் என்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Aldi, Coles, Foodworks, IGA மற்றும் Woolworths ஆகிய சங்கிலித்தொடர் உணவு மற்றும் பல்பொருள் அங்காடி நிறுவனங்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் நியூ சவுத் வேல்ஸ் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிட்ட உணவகங்கள் மற்றும் அங்காடிகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிறுவனங்கள் இதே போன்ற கோரிக்கையை இதற்கு முன்னர் விக்டோரியாவிலும் முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.

Rising epidemic in the state of New South Wales: Collective instruction to customers to follow the guidelines of various food companiesகுறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இது தொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்களை ஏற்படுத்தி வருகின்றன மேலும் கடைகளுக்கு வரும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், ஊழியர்களுக்கு உரிய மரியாதையை வழங்கி அவர்களின் வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவதை உறுதி செய்யும் விதமாக கியூ ஆர் கோட் மூலமாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு வாடிக்கையாளர்கள் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் பொறுமையுடனும் அதே நேரத்தில் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றியும் தங்களுக்கு ஒத்துழைப்பு அளித்து பாதிப்பிலிருந்து அனைவரும் விரைவில் மீண்டு வரலாம் என்றும் குறிப்பிட்ட நிறுவனங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

Link Source: https://ab.co/3AcLXwH