Breaking News

காணாமல் போன பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் Vitaly Shishov : உக்ரைனில் பூங்கா ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Missing Belarusian social activist Vitaly Shishov. body found hanging in a park in Ukraine

பெலாரஸ் மக்களின் நல்வாழ்விற்காக அமைப்பு ஒன்றை நிறுவி சமூக செயற்பாட்டாளர் Vitaly Shishov செயல்பட்டு வந்த காணாமல் போனதாக கூறப்பட்டு வந்த நிலையில், உக்ரைனில் உள்ள Kiev பூங்காவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் குற்றவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ள Alexander Lukashenko தேர்தல் நேரத்தில், தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் எதேச்சதிகார ஆட்சி நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிபரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி அண்டை நாடுகளான, போலந்து, லிதுவேனியா, உக்ரைன் நாடுகளில் பெலாரஸை சேர்ந்த பலர் தஞ்சமடைந்துள்ளனர்.

Missing Belarusian social activist Vitaly Shishov. body found hanging in a park in Ukraine.ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெலாரஸ் பத்திரிகையாளர் ஒருவர் சென்ற விமானத்தை நடுவானில் வழிமறித்து மின்ஸ்க் நகரில் தரையிறக்கியதும், தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த தடகள வீராங்கனை போலந்தில் தஞ்சம் அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மரணமடைந்த விட்டாலி ஷிஷாவ் உக்ரைன் நாட்டில் உள்ள பெலாரஸ் மக்களின் நல்வாழ்விற்காக சமூக சேவை அமைப்பு ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை வீட்டை விட்டு வெளியில் சென்ற விட்டாலி ஷிஷாவ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்று புகைரளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று அவரது வீட்டருகே உள்ள Kiev பூங்காவில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது, உக்ரைன் காவல்துறையினர் இதனை கொலை என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Link Source: https://bit.ly/3s03c1m

leave a reply