Breaking News

ஆஸ்திரேலியாவில் இளம் வயதினருக்கு தடுப்பூசி போடுவதற்கான புதிய மாதிரி திட்டங்களை அறிவித்தார் பிரதமர் ஸ்காட் மோரிசன் : வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் புதிய திட்டத்தை பின்பற்ற அறிவுறுத்தல்

Prime Minister Scott Morrison announces new prototype vaccines for teenagers in Australia. All State Government Instructed to Follow New Plan

ஆஸ்திரேலிய அரசும், தேசிய அமைச்சரவையும் இணைந்து உருவாக்கிய புதிய மாதிரி தடுப்பூசி திட்டத்தை பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டார். இதன்படி தடுப்பூசி தேவைப்படும் இளம் வயதினருக்கு தடுப்பூசி குறித்தும் அதற்கான உரிய வழிமுறைகள் மற்றும் வைரஸ் பரவலை தடுப்பதற்கான திட்டங்கள் இதில் அடங்கி இருப்பதாகவும், மாகாண அரசுகள் தங்களுக்கான வழிகாட்டியாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் பல்வேறு மாகாணங்களில் போடப்பட்டுள்ள முடக்க நிலையில் தளர்வுகளை ஏற்படுத்துவதற்கும், சர்வதேச எல்லைகளை நடைபெறும் திறப்பதற்கு இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா உள்ளிட்ட மாகாணங்களில் தற்போது வரை பதிவு செய்யப்பட்டுள்ள வைரஸ் பாதிப்புகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சையில் இது போன்ற விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. மேலும் சுகாதாரத்துறை மற்றும் அதிகாரிகள் குழு உடனடியாக வைரஸ் பாதிப்பு, தடுப்பூசி விவரங்களை வழங்குவதற்கு தயார் நிலையில் இருக்குமாறு மாகாண அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Prime Minister Scott Morrison announces new prototype vaccines for teenagers in Australia All State Government Instructed to Follow New Plan,பெரும்பாலான மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு 0 ஆக உள்ள நிலையில் வேறு மாநிலங்களிலிருந்து அங்கு வருவதற்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய வகை டெல்டா வைரஸின் பாதிப்பு பல மடங்கு தீவிரமாக இருக்கும் நிலையில் அதனை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை பொறுமை காக்க வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் தடுப்பூசி நடவடிக்கையை தீவிரப்படுத்தி முன்னுரிமை குழுக்களை அடுத்து இளம் வயதினருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளிகள் மூலமாக தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள பிரிஸ்பேன், நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து உள்ளிட்ட மாகாணங்களில் முடக்கநிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் அங்கு மக்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Link Source: https://ab.co/3xnW0NF

leave a reply