Breaking News

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் அதிகரித்துவரும் BA.2 வகை ஒமைக்ரான் தொற்று : கடும் அழுத்தத்தில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள்

ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மாகாணங்களில் கோவிட் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ஒமைக்ரான் திரிபு வகை BA.2 தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதால் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

Rising BA.2 type omicron infection in Queensland, Australia. Hospitals and physicians under severe pressure.அதேநேரம் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் உள்ளிட்டோர் கடுமையான அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 722 பேர் புதிதாக நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 413 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே மருத்துவமனைகளில் அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் நிலையில் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 3 ஆயிரத்து 305 பேர் தொற்று பாதிப்பின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடன் நேரடித் தொடர்பில் இருந்த வர்களாகவும் கருதப்பட்டு உள்ளனர்.

மருத்துவத்துறை ஒட்டுமொத்தமாக கடும் அழுத்தத்தில் இருக்கும் நிலையில் மற்ற சேவைகள் அனைத்தையும் படிப்படியாக குறைத்து விட்டு, கோவிட் தொற்றுக்கான சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், மருத்துவப் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றுவதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர்
Yvette D’Ath கூறியுள்ளார்.

Rising BA.2 type omicron infection in Queensland, Australia. Hospitals and physicians under severe pressure...Brisbane, Gold Coast, Cairns, Darling Downs உள்ளிட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பின் தீவிரம் அதிகரித்து இருப்பதாகவும் அங்கு ஏற்கனவே மழை வெள்ள பாதிப்புகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாதித்தவர்களை தனிமை படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மைக்ரேன் தொற்றின் புதிய வகை வைரஸ் ஆன BA.2 குழந்தைகளை அதிக அளவில் தாக்குவதாகவும் குடும்பத்தில் தொற்று பாதித்தவர்கள் குழந்தைகளிடம் நேரடி தொடர்பில் இருப்பதை தவிர்க்குமாறும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அடுத்தடுத்த வாரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், தற்காலிக தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படுவதால் உடனடியாக பூஸ்டர் தோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி அவர்கள் உடனடியாக செலுத்தி கொள்ளுமாறும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Link Source: https://ab.co/3IZzOPG