மேற்கு ஆஸ்திரேலியாவின் 34வது ஆளுநராக காவல்துறை ஆணையராக பணியாற்றி வந்த Chris Dawson, பொறுப்பு ஏற்பார் என்று ப்ரீமியர் Mark McGowan அறிவித்துள்ளார். ஜூலை மாதம் அவர் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு மேற்கு ஆஸ்திரேலியாவின் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்ட அவர், கோவிட் பெருந்தொற்று காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் சிறந்த முறையில் கையாண்டு செயல் படுத்தியதாக ப்ரீமியர் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள், முடக்கநிலை கடைபிடிப்பு, தடுப்பூசி அனைத்து விவகாரங்களிலும் மாகான ஒருங்கிணைப்பாளராக காவல் ஆணையர் Chris Dawson செயல்பட்டு சிறப்பான முறையில் தனது பங்களிப்பை வழங்கியதாகவும் Mark McGowan கூறியுள்ளார். தற்போதைய ஆளுநர் Kim Beazley பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில் புதிய ஆளுநராக காவல் ஆணையர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஜூலை மாதம் பதவியேற்றுக் கொள்வார் என்று ப்ரீமியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
17 வயதில் காவல்துறையில் இணைந்த Chris Dawson 46 ஆண்டுகாலம் தனது சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வழங்கிக் கொண்டு வருவதாகவும் அவரது அவரது அர்ப்பணிப்பு உணர்வுதான் அவரை தற்போது மாகாண ஆளுநராக நியமிக்க வைத்திருப்பதாகவும் ப்ரீமியர் Mark McGowan பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆளுநராக பதவி ஏற்க உள்ள காவல் ஆணையர் Chris Dawson பேசுகையில் தனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக இதனை பார்ப்பதாகவும் இந்த வாய்ப்பை வழங்கிய ப்ரீமியர் Mark McGowan க்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும், மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு தனது சேவைகளை தொடர்ந்து செய்வதற்கு வழங்கப்பட்டிருக்கும் வாய்ப்பை தான் பெருமையாக கருதுவதாகவும் Chris Dawson குறிப்பிட்டுள்ளார். இதனிடையே தற்போதைய ஆளுநர் Kim Beazley பங்களிப்பு மற்றும் அவருடைய பணிகளை குறிப்பிட்டு ப்ரீமியர் நன்றி தெரிவித்துக்கொண்டார். நெருக்கடியான காலகட்டங்களில் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு துணை நின்ற அனைவருக்கும் பங்கு இருப்பதாகவும் அதில் தற்போதைய ஆளுநர் நன்றிக்கு உரியவர் Mark McGowan என்றும் தெரிவித்தார்.
Link Source: https://ab.co/37gTHEL