Breaking News

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவிலுள்ள தென்கிழக்கு கடலோரப் பகுதியான பெர்த்தில் அவ்வப்போது மக்கள் சுறா மீன்களால் தாக்கப்படும் சம்பவம் அங்கு வசிப்போரை பதற்றம் அடையச் செய்துள்ளது.

பெர்த் பகுதியிலுள்ள குறிப்பிட்ட பகுதி ஒரு பக்கம் கடல் மற்றும் மற்றொரு பக்கம் விவசாய நிலம் மிகவும் எழில் கொண்டதாக உள்ளது. மேலும் இது சுற்றுலாத்துறைக்கும் பெயர் போனது. அங்குள்ள மக்கள் வெளிநாட்டவர்கள் என பலரும் சர்ஃப்பிங்க், டைவிங், நீச்சல் என பல்வேறு சாகசங்கள் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் சமீபகாலமாக கடந்த சில ஆண்டுகளாக பகுதிக்கான கரையில் சுறா மீன்கள் அவ்வப்போது முகாமிடுவது அதிகரித்துள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் கடலுக்குள் செல்லும் போது, சுறா மீன்களால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

Residents of Perth on the southeastern coast of Western Australia have been hit by occasional shark attacksகடந்த 2017-ம் ஆண்டு கடலுக்குள் சர்ஃப் செய்ய சென்ற 17 வயது இளம்பெண் சுறா மீன்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அதேபோன்று கடந்த 2020-ம் ஆண்டு காரி ஜான்சன் என்கிற நடுத்தர வயது நபர் சுறா மீன்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் சுறா மீன்களுக்கான பகுதியில் கடல் வழியில் தனியாக ஏற்படுத்திட வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் அரசு இதுதொடர்பான நடவடிக்கைகளில் பெரியளவில் கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும் சுறா மீன்களை காக்கவும், அதனுடைய வாழ்வாதாரத்தை மீட்கும் விதமாக பல்வேறு சூழலியல் ஆர்வல்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதே சமயத்தில் சுறா மற்றும் மனித மோதலை தடுக்கும் நடவடிக்கை அரசு மட்டுமே மேற்கொள்ள இயலும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Link Source: https://ab.co/3NQcbg5