Breaking News

ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியின்மை, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

பெர்த் பகுதியை சேர்ந்த கெல்லன் எல்டர், மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், அண்மையில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுமிகளுக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த போது, அவர்களுக்கு வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும், பசியின்மை இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மூட்டு வலி, அயர்ச்சியில் இருந்து தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும் கூறுகிறார். தங்களுக்கு எதிர்ப்பு சக்தி நன்றாக உள்ளதால், எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கருதிய நிலையில், இந்த அறிகுறிகள் சற்று ஏமாற்றம் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

People infected with the Omicron type coronavirus have been shown to have symptoms such as loss of appetite and diarrhea..மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள, ராயல் ஆஸ்திரேலியன் கல்லூரியில் மருத்துவராக பணிபுரியும் ரம்யா ராமன், ஒமிக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம், பரவலாக வயிறு சார்ந்த உபாதைகள் காணப்பட்டதாக தெரிவிக்கிறார். சிறுவர்களுக்கு ஒமிக்ரான் வகை தொற்று ஏற்படும் நேரங்களில் அவர்கள் அதிகளவு திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், நீர் சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

அதே நேரம், குழந்தைகளுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்பது ஆறுதல் அளித்தாலும், பெற்றோர்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர் ரம்யா ராமன் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3v8mTWw