Breaking News

உலகளவிலுள்ள ரசிகர்களிடையே பழங்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த மேஜிக் தந்திரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்டீல் பெட்டியை ஆஸ்திரேலியாவின் கலை பண்பாட்டுத்துறை கைப்பற்றியுள்ளது.

Australia's art and culture department has seized a steel box used for magic tricks that have long been popular among fans around the world.

ஆஸ்திரேலிய நாட்டின் புகழ்பெற்ற மேஜிக் கலைஞர் கிரேட் லெவண்டே. கடந்த 1920-ம் ஆண்டு முதல் மேஜிக் துறையில் பிரபலமாக இருந்த இவர், 1977-ம் ஆண்டுடன் ஓய்வு பெற்றார். இவருடைய மேஜிக்கில் மிகவும் புகழ் வாய்ந்ததாக இருந்தது ஸ்டீல் பெட்டியை மறைய வைக்கும் தந்திரம்.

நொடிகளில் மறைந்து விடும் இந்த தந்திரம் தொடர்பான ரகசியம் பெரும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. பல்வேறு வகையில் இவர் மேஜிக் சாகசங்களை செய்யக்கூடியவராக இருந்தாலும் கிரேட் லெவண்டேவின் புகழ்பெற்ற மேஜிக் தந்திரமாக பெட்டியை மறைய வைக்கும் செயல்பாடு இருந்தது.

Australia's art and culture department has seized a steel box used for magic tricks that have long been popular among fans around the world..கடந்த 1978ம் ஆண்டு மறைந்த லெவண்டே பயன்படுத்தப்பட்டு வந்த ஸ்டீல் பெட்டி சிகாகோவில் வசித்து வந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு வரை அவரிடம் இருந்த இப்பெட்டியை சுமார் 8,826 அமெரிக்க டாலர்களுக்கு ஆஸ்திரேலியாவின் கலை பயன்பாட்டுத் துறை வாங்கியுள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்பேர்ன் கலை பண்பாட்டு அருங்காட்சியகத்துக்கு புதிய அழகு சேர்ந்துள்ளது துறை சார்ந்தவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3uZYLFH