Breaking News

உருமாற்றமடைந்த 4 கொரோனா வைரஸ்களின் பரவல் வேகம் அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

உலகம் முழுவதும் 17 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 35 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பரவிய போது இந்த வைரஸ் nCoV-2019 என்று தொடக்கத்தில் அழைக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. பெரும்பாலான உருமாற்றம் அடையும் வைரஸ்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது .

ஆனால் அண்மையில் பிரிட்டன், தென் ஆப்ரிக்கா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளில் கண்றியப்பட்ட உருமாற்றம் அடைந்த வைரஸ்களின் குணாதிசயத்தில் மாற்றம் காணப்படுவதாகவும், இந்த வைரஸ்கள் மிக வேகமாக பரவும் தன்மையுடையதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Researchers have suggested that the rate of transmission of mutated 4 corona viruses may be higherதற்போது வியட்நாம் நாட்டில் உருமாற்றமடைந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவிலும், பிரிட்டனிலும் காணப்பட்ட வைரஸ்களை ஒத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உருமாற்றமடைந்த வைரஸ்களை நாடுகளின் பெயரில் அடையாளம் காண்பதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,

அந்த வைரஸ்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வேறு பெயர்களை சூட்டியுள்ளது. ஆல்பா, பீட்டா, காமா, கப்பா, டெல்டா என்ற பெயர்களில் இந்த வகை வைரஸ்கள்
அடையாளப்படுத்தப்படுகின்றன.

உருமாற்றமடைந்த வரஸ்கள் சில நேரங்களில் அதிவேகமாக பரவும் தன்மையை பெறுவதற்கு அதன் அமைப்பில் ஏற்படும் மாற்றமே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ்கள் நம் உடலில் நுழைந்ததும், மற்ற செல்களை போலவே இந்த வைரஸும் பெருக்கமடைகிறது.

அவ்வாறு பெருக்கம்டையும் போது சில வைரஸ்களின் ஜீன்களில் தவறு ஏற்படுகிறது.

அவ்வாறு ஜீன்களில் ஏற்படும் மாற்றங்கள் வைரஸ்களின் குனாதிசயங்களை பெரும்பாலும் பாதிப்பதில்லை. ஆனால் சில நேரங்களில் அதன்
புறத்தோற்றத்திலும், குணாதிசயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

உதாரணமாக கப்பா என்ற அழைக்கப்பட்டும் பி.1.6171 வகை வைரஸ்களின் புரதம், மற்ற வைரஸ்களில் இருந்து மாறுபட்டுள்ளது.

கப்பா வைரஸ்களின் மேல் பகுதியில் உள்ள முள் போன்ற புரோட்டின் சாதாரண செல்களை மிக எளிதில் பற்றிக்கொள்ளும் திறன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

Researchers have suggested that the rate of transmission of mutated 4 corona viruses may be higher,வலுமிக்க கைகளால் பிடிக்கப்படும் பொருள் எப்படி எளிதில் விடுபட முடியாதோ அதே போல , உருமாற்றமடைந்த வைரஸ்களின் செல்களை தாக்கும் போது அது தாக்கும் வாய்ப்பு 50% முதல் 100% வரை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிகளவு வைரஸ் பரவல் ஏற்படும் போது, அதே அளவு வைரஸ் உருமாற்றம் அடைய வாய்ப்புள்ளதாக பேராசிரியர் மெக்கேய் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் லான் மெக்கேய், இந்த உருமாற்றமடைந்த வைரஸ்கள் வீரியமிக்க தாகவும், முற்றிலும் மாறுபட்டும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3fLZt2V