Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் விடுமுறையை கழித்த விக்டோரியாவை சேர்ந்த குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விக்டோரியாவை சேர்ந்த ஒரு தம்பதியும், அவர்களின் இரு குழந்தைகளும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கடற்கரை பகுதியில் மே 19 முதல் 24 ஆம் தேதி வரை தங்கள் விடுமுறையை கொண்டாடினர்.

இவர்கள் ஜெர்விஸ் வளைகுடா, ஹயாம்ஸ் கடற்கரை, வின்செண்டியா, கோல்பவுர்ன் போன்ற பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

இக்குடும்பத்தினர் மே 24 ஆம் தேதி விக்டோரியா திரும்பியுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு மே 25 ஆம் தேதி அறிகுறி தென்பட்டதாகவும், மே 31 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A corona infection has been confirmed in a Victorian family spending a holiday in the state of New South Walesஇது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் Gladys Berejiklian, விக்டோரியாவை சேர்ந்தவர்கள் பயணம் செய்ய இடங்களில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் மூலம் சுமார் 243 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார். தங்கள் சுகாதாரதுறை அதிகாரிகள் தொடர்பறிதல் நடவடிக்கையை சிறப்பாக கையாளக்கூடியவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விக்டோரியாவில் ஏற்பட்டு வரும் தொற்று பரவல் நிலையை உண்ணிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விக்டோரியாவில் தற்போது ஏற்பட்டு வரும் தொற்று பரவலால் எல்லையை மூடும் எண்ணம் தற்போது இல்லை என்று கூறியுள்ளார்.

விக்டோரியாவில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரே நாளில் சுமார் 14,000 நபர்களுக்குக்கும், மொத்தமாக 14 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தற்போது கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3wVjlGA