Breaking News

விக்டோரியாவில் மேலும் ஒரு வாரம் நீ்ட்டிக்கப்படும் ஊடரங்கு : தொடர்ந்து போராடத் தயாராக இருக்குமாறு ப்ரீமியர் டேனியல் ஆன்ட்ரூஸ் கோரிக்கை

மெல்போர்னில் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன், அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்திய நிலையில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக என்று தற்கால ப்ரீமியர் James Merlino தெரிவித்துள்ளார். ப்ரீமியர் Daniel Andrews சிகிச்சைக்காக மருத்துவ விடுப்பில் உள்ள நிலையில் ஊரடங்கு அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஹாலிடே ஹவுஸில் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்த பிரீமியர் ஆன்ட்ரூஸ்-க்கு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் ஓய்வில் உள்ளார். தன் தொடர்ந்து மருத்துவ குழுவோடு ஆலோசனையில் இருப்பதாகவும் சிகிச்சை மற்றும் ஓய்வு முடிந்தபின்னர் எப்போது பணிக்கு திரும்புவேன் என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார்.

One more week-long rally in Victoria Premier Daniel Andrews calls for readiness to continue fighting.மேலும் மெல்போர்னில் மக்கள் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கும் செல்வது கடினமான ஒன்றுதான் என்றும் அதே நேரத்தில் இது தவிர்க்க முடியாத சூழல் என்றும் ஆன்ட்ரூஸ் கூறியுள்ளார். இது போன்ற முக்கியமான தருணங்களில் மக்கள் இன்று மேற்கொள்ளும் கட்டுப்பாடுகளை இனிவரும் நாட்களிலும் தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே உயிர்களை காத்து நம்மால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்றும், தொடர்ந்து போராடு விக்டோரியா என்றும் சமூக வலைதளத்தில் ப்ரீமியர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளியன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விக்டோரியாவில் அமலுக்கு வருகிறது என்றும், தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பாதிப்பு கண்டறியப்படும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. செவ்வாயன்று புதிதாக 6 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 51 ஆயிரம் பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளில் இருந்து தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இந்திய வகை கப்பா வைரஸ் தொற்று இருப்பதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் தொடர்ந்து தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தொய்வில்லாமல் தொடர வேண்டும் என்றும், பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு முதலில் தடுப்பூசி அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

One more week-long rally in Victoria Premier Daniel Andrews calls for readiness to continue fighting,இந்நிலையில் புதிய வகை குரல் வைரஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள தற்காலிக ப்ரீமியர் ஜேம்ஸ் மெர்லினோ, இது மிகவும் வீரியம் மிக்க வேகமாக பரவும் தன்மை கொண்ட வைரஸ் ஆக உள்ளது என்றும், இதற்கு முன்னர் எப்போதும் இதுபோன்று வைரஸின் வேகம் இருந்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் ஊரடங்கு காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை சரி செய்யும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தற்காலிகப் பிரீமியர் குறிப்பிட்டுள்ளார். அதற்காக அத்தியாவசிய பொருட்கள் கடைகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளோடு செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கண்டறியப்படும் அறிவிப்பு வந்தால் அந்த இடத்தில் தொடர்புடையவர்கள் உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் பரிசோதனைகளை மேற்கொண்டு உடனடியாக சிகிச்சை பெறுமாறு தற்காலிக பிரிமியர் ஜேம்ஸ் மெர்லினோ தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/2SOLSPg