Breaking News

இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்ப ஏதுவாக மே 15 ஆம் தேதிக்கு பிறகு மீட்பு விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rescue flights will be launched after May 15 to allow Australians in India to return home.

வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் மீட்பு விமானங்களை இயக்க மீண்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பிராந்தியத்தில் உள்ள ஹோவர்ட் ஸ்பிரிங் தனிமை முகாமில், இந்தியாவில் இருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்கள் தனிமைபடுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நிலமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் ஆஸ்திரேலியர்கள் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 14 ஆம் தேதிக்குள்ளாக ஹோவர்ட் ஸ்பிரிங் தனிமை முகாமில் உள்ளவர்களின் தனிமை காலம் முடிந்து வெளியேறுவார்கள் என்பதால், அந்த முகாமில் ஏற்படும் சுமையை குறைக்கவே
அவகாசம் எடுத்துக்கொண்டதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Rescue flights will be launched after May 15 to allow Australians in India to return homeஇந்தியாவில் இருந்து அனுமதியின்றி நாடு திரும்புவர்கள் மீது உயிரி பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு கடந்த வாரம் எச்சரித்திருந்தது. இதன்படி அனுமதியின்றி நாடு திரும்பினால் அவர்களை 5 ஆண்டுகள் சிறையில் அடைக்க இந்த சட்டத்தில் இடமுண்டு . இந்த அறிவிப்பு மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பலர் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Barry O’Farrell தகவலின் அடிப்படையில் சுமார் 9000 ஆஸ்திரேலியர்கள் இந்தியாவில் இருப்பதாகவும், அவர்களின் 900 பேருக்கு உடனடி உதவி தேவைபடுவதாகவும்
தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரம் வரும் வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கெல்லி
தெரிவித்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்வக்குடி இந்தியர்கள் இந்த அனுகுமுறையை எளிதில் மறப்பார்களா என்பதை உறுதியாக கூறமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

Link Source: https://cutt.ly/4bRHKHY