Breaking News

மெல்போர்ன் சவுத்பேங்க் பகுதியில் சரக்கு வாகனம் மோதி 5 பேர் படுகாயம் : இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

5 injured in truck collision in Melbourne's Southbank. Two hospitalized in critical condition

வியாழனன்று மாலை 7 மணி அளவில் நகரப் பகுதியில் இருந்து பவர் ஸ்ட்ரீட் வரியாக இரட்டை டேங்கர் லாரியானது போக்குவரத்து சிக்னலையும் மீறி பாதசாரிகள் நடைமேடையில் ஏறியதாக விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக Wyndham Vale சேர்ந்த 64 வயதான ட்ரக் ஓட்டுநரை கைது செய்துள்ள விக்டோரியா போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே விபத்தில் காயமடைந்த பாதசாரிகள் 5 பேரில் படுகாயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 injured in truck collision in Melbourne's Southbank, Two hospitalized in critical conditionவிபத்தை ஏற்படுத்திய ட்ரக் வாகனத்தை விசாரணை பிரிவு போலீசார் மேற்கு மெல்போர்னின் Truganina பகுதியில் கைப்பற்றியு ள்ளனர். மேலும், விசாரணையில் ஓட்டுநரிடம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த பகுதியில் தூண் ஒன்றின் மீது மோதிய பிறகும் வேகத்தை ஏன் கட்டுப்படுத்தவில்லை என்றும், பாதசாரிகள் அதிகம் நடமாடும் அந்த இடத்தில் வாகனத்தை ஏன் நிறுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், விபத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் கார் கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டோர் காவல்துறையை அணுகலாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

விபத்தில் பாதிக்கப்பட்ட 4 ஆண், ஒரு பெண் உட்பட 5 பேரும் 20 முதல் 30 வயதுக்கு உட்டபட்டவர்கள் இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

படுகாயமடைந்த இரு 20 வயது நபர்களில் ஒருவர் ஆல்பிரட் மருத்துவமனையில் உள்ள ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றொருவர் ஆபத்தான நிலையில் இருந்தாலும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் சாலையில் ஆங்காங்கே விழுந்து இருந்ததை பார்க்கும் அதிர்ச்சியாகவும், கொடூரமாகவும் இருந்ததாகவும், உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினர் விரைந்து செயல்பட்டனர் என்றும் விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

5 injured in truck collision in Melbourne's Southbank Two hospitalized in critical conditionமேலும், விபத்து நடந்த சிட்டி கார்னர் சாலை மிகவும் நெருக்கடிநான இடம் என்றும், வாகன நெரிசல் மற்றும் பாதசாரிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும் இடம் என்றும் சக ஓட்டுநரான டைமண்ட் க்ரீக் பகுதியை சேர்ந்த டேவிட் தெரிவித்துள்ளார். ட்ரக் போன்ற பெரிய வாகனங்களை அந்த பகுதியில் இயக்குவது மிகவும் சவாலானது என்றும் டேவிட் கூறியுள்ளார்.

இதனிடையே விபத்து தொடர்பாக விளக்கமளித்துள்ள மெல்போர்ன் மேயர் Sally Capp, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும், விபத்து நடந்த பகுதியில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டு்ள்ளார்.

Link Source: https://cutt.ly/zbRLk0B