Breaking News

AstraZeneca செலுத்திக்கொண்ட மேலும் 5 பேருக்கு இரத்த உறைதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது அரிதிலும் அரிதான நிகழ்வு என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மே 2 ஆம் தேதி நிலவரப்படி ஆஸ்திரேலியாவில் சுமார் 14 லட்சம் பேருக்கு Astrazeneca தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த வாரம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 5 பேருக்கு இரத்த தட்டணுக்கள் குறைபாடும், இரத்தம் உரைத்தல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருந்து பொருள் நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் 3 பேருக்கு இரத்தம் உறைதல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருந்து பொருள் நிர்வாகத்துறை தெரிவித்துள்ளது.

Five more people have been confirmed to have blood clots because of AstraZeneca.விக்டோரியாவை சேர்ந்த 74 வயது ஆண் உட்பட 51 வயது பெண் ஒருவருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரத்த உறைதல் பாதிப்பு ஏற்படடவர்களில் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த 66 வயது ஆண் ஒருவரும், டாஸ்மானியா, மேற்கு ஆஸ்திரேலியா பகுதியை சேர்ந்த இருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருந்து பொருள் நிர்வாகத்துறை தலைமை பேராசிரியர் John Skerritt, தடுப்பூசியால் ஏற்படும் நன்மைகள் அதிகம் என்றும், ஒரு சிலருக்கே இந்த பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.
இது மிகவும் ஒரு அரிதான பாதிப்பாகவே ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் இந்த பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கு ஏற்கனவே பல்வேறு இனை நோய்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரத்தம் உறைதலால் பாதிக்கப்பட்ட 4 பேர் தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Link Source: https://cutt.ly/9bRFO8n