Breaking News

சிட்னியில் இருந்து Cairns வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் விவரங்கள் வெளியீடு : அவர்கள் சென்று வந்த இடங்களும் தொற்று பரவல் மையங்களாக அறிவிப்பு

குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள விரிவான அறிவிப்பில் சிட்னியில் இருந்து Cairns வந்த விமானத்தில் இருந்த பயணிகளின் விவரங்கள் மற்றும் அவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. JetStar JQ950 விமானத்தில் இருக்கை எண் 2 முதல் 6 வரையிலான நபர்கள் நெருங்கிய தொடர்பு என்றும், மேலும் அந்த பயணிகள் சென்று வந்த இடங்கள் கண்டறியப்பட்டு அவை தொற்று பரவல் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Release of details of passengers on the flight from Sydney to Cairns. Notices of their destinations as outbreak hubs.பயணிகள் குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியல் சரி பார்த்த பின்பு உரிய முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் குறைந்த அளவிலான பாதிப்புடைய இடங்கள் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் சென்று வந்த இடங்கள் என அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

நகரப்பகுதிகளில் விமான நிலையங்கள் ரயில் நிலையங்கள் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தொடர்பு பட்டியலில் உள்ளவர்கள் சென்றுவந்த விவரங்களும் குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரிஸ்பேன் விமான நிலையம், Yamanto, Robino டவுன்ஷிப், Fernvale பகுதிகளில் நவம்பர் 23ஆம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரையில் உள்நாட்டு விமான சேவை நிலையங்கள், டவுன்ஷிப் பகுதி, மருந்து தயாரிப்பு கூடம் பேக்கரி உள்ளிட்ட இடங்கள் குறைந்த அளவு பாதிப்பு உள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் மேற்கண்ட இடங்களுக்கு சென்று வந்த நேரங்களும் குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

Link Source: https://ab.co/3rY6JPR