Breaking News

ஆஸ்திரேலியாவின் கோவிட் – 19 சுகாதார நடவடிக்கைகளை படுகொலைகளோடு ஒப்பிட்டுப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் : கருத்தை திரும்பப் பெறக் கோரி தேசியக் கட்சி தலைவர்கள் கண்டனம்

Member of Parliament who compared Australia's Covid-19 health measures to massacres. National Party leaders condemn withdrawal

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைமுறையில் உள்ள கோவிட் 19 சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதேபோன்று சர்சைக்குரிய பெருந்தொற்று மசோதா ஆகியவற்றுக்கு கடுமையான எதிர்ப்பும் எழுந்து வந்தது.

இந்நிலையில் யூடியூபில் வெளியான வலைத்தொடர் ஒன்றில் தோன்றி ஆஸ்திரேலியாவின் தொழிலாளர் கட்சி பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் George Christensen 30 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார்.

Member of Parliament who compared Australia's Covid-19 health measures to massacres, National Party leaders condemn withdrawalஅந்த உரையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக Auschwitz மற்றும் Tiananmen Square படுகொலைகளுக்கு ஒப்பான நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தனது நிர்வாகத்தில் படுதோல்வி அடைந்து விட்டதாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். மேலும் மக்கள் பெருந்திரளாக பாராளுமன்ற கட்டிடத்தின் முன்பு போராட்டம் நடத்த வருமாறும் அவர் காணொளியில் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் தொழிலாளர் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் George Christensen- ன் பேச்சு கடும் கண்டனத்திற்கு உரியது என்றும் அவர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் மத்திய தேசிய கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையை மதிக்கும் அதே நேரத்தில் இதுபோன்ற தீவிர வலதுசாரி கோட்பாட்டாளர் இன் கருத்துக்களை திரையில் தோன்ற அனுமதித்தது மற்றும் மக்களை போராட்டத்திற்கு தூண்டியது உள்ளிட்டவை கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தற்கலிக தேசிய கட்சி தலைவராக உள்ள David Littleproud கூறியுள்ளார். கட்சியின் தலைவர் Burnaby Joyce வெளிநாடு சென்றுள்ள நிலையில் இவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இது போன்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தொழிலாளர் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் George Christensen இந்த கருத்தை தெரிவித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த தேர்தலில் ஓய்வு பெறும் முடிவோடு இருக்கும் George, தொடர்ந்து சமூக வலைதளங்களில் நாட்டில் பின்பற்றப்படும் முடக்க நிலை மற்றும் தடுப்பூசி நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என்றும் தேசிய கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.

அவரோடு பாராளுமன்ற அறையில் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாங்கள் விரும்புகிறோம் என்றும் அதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றும் தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

George Christensen ஆஸ்திரேலியாவில் பின்பற்றப்படும் covid-19 கட்டுப்பாடுகளை நாசி மற்றும் சோவியத் யூனியன் சர்வாதிகார நடவடிக்கைகளோடு ஒப்பிட்டு கடுமையான கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

அரசியல்வாதிகளாக உள்ளவர்கள் தொடர்ந்து அவர்களுக்கான எல்லையை கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரிவினையை கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தேசிய கட்சி தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Link Source: https://ab.co/3psrKPC