Breaking News

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தொடரும் அதி கனமழை : சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு பதிவானது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், கோவை, ராமநாதபுரம், நெல்லை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் உபரி நீர் திறக்கப்பட்டதால் எடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Red alert issued for 8 districts including Chennai. Meteorological Department...இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 10ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 11ம் தேதி நண்பகல் வரைக்கும் பரவலாக இந்த அதி கனமழை தொடரும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஸ்ரீஹரிகோட்டா கடலூர் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது சற்று வடக்கே ஸ்ரீஹரிகோட்டா மாமல்லபுரம் இடையே கண் பகுதி முழுவதுமாக கரையை கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் 11ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும். தமிழகத்தில் வட மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Red alert issued for 8 districts including Chennai. Meteorological Department.இதன் காரணமாக தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் மழையின் அளவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினர் தேவையான உபகரணங்களுடன் குறிப்பிட்ட பகுதிகளில் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் தயார் நிலையில் இருக்குமாறு பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை வழங்குமாறும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Link Source: shorturl.at/bnK07