Breaking News

குழந்தைகளின் விளையாட்டு பொம்மையைப் போல நிஜ துப்பாக்கி : தயாரிப்பை நிறுத்த பொம்மை தயாரிப்பு நிறுவனம் அமெரிக்க துப்பாக்கி தயாரிப்பு நிறுவனத்திற்கு கோரிக்கை

Real gun like a children's toy. a toy manufacturer requesting the American gun manufacturer to stop production

மேற்கு அமெரிக்காவின் உட்டாவை மையமாகக் கொண்ட துப்பாக்கி தயாரிப்பு நிறுவனமான Culper Precision குழந்தைகளின் விளையாட்டு பொம்மையைப் போல நிஜ துப்பாக்கி ஒன்றை தயாரித்து அதனை சந்தைப்படுத்தி உள்ளது. மேலும் அந்த துப்பாக்கி தொடர்பான விளம்பரத்தில் “நமது குழந்தை கால கனவு ஒன்று வாழ்க்கையில் நிறைவேறியது” என்ற வாசகங்களையும் இடம் பெற வைத்துள்ளது. சிகப்பு, மஞ்சள், நீலம் என வண்ணங்கள் கலந்து பார்ப்பதற்கு விளையாட்டுத் துப்பாக்கியை போலவே காட்சியளிக்கும் இந்தத் துப்பாக்கி கிட்டத்தட்ட முப்பது சுற்றுகள் வரை சுடக்கூடிய நிஜமான துப்பாக்கி ஆகும்.

Real gun like a children's toy, a toy manufacturer requesting the American gun manufacturer to stop productionசெமி ஆட்டோமெடிக் துப்பாக்கியான இவை 549 டாலர்கள் முதல் 765 அமெரிக்க டாலர்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு இவை விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில், பொம்மை துப்பாக்கியை போல காட்சியளிக்கும் நிஜத் துப்பாக்கியை தயார் செய்வது மற்றும் விற்பனை செய்வதை சம்பந்தப்பட்ட நிறுவனம் கைவிட வேண்டும் என்று Lego Toys நிறுவனம் கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் சிறுவர்கள் தெரியாமல் துப்பாக்கியால் சுட்டு ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை 165 என்றும் , அதில் 142 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை தெரிவிக்கிறார் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தக் கோரும் பெற்றோர்கள் அமைப்பைச் சேர்ந்த Shannon Watts.

Real gun like a children's toy., a toy manufacturer requesting the American gun manufacturer to stop productionCulpers Precision நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Brandon Scott சம்பந்தப்பட்ட லெகோ டாய்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடிதம் கிடைக்கப் பெற்று இருப்பதாகவும் ஆனால் அதற்கு முன்பாகவே 20க்கும் மேற்பட்ட அந்த பொம்மை ரக துப்பாக்கிகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதுபோன்ற துப்பாக்கி கலாச்சாரத்தை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3B9h3pY