Breaking News

விக்டோரியா மாகாணத்தில் சமூகப்பரவல் காரணமாக புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று : ஆசிரியருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து பள்ளிகள் மூடல்

சிட்னியில் இருந்து வந்த Removalist குழுவின் 7 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே இனம் காணப்பட்ட தொற்று பாதிப்பு பட்டியலில் இருந்தவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஆறாவது நபர் 30 வயதானவர் என்றும், அவர் நியூ சவுத் வேல்ஸ்ல் இருந்து வந்திருந்த குடும்பம் ஒன்று சென்ற சூப்பர் மார்கெட்டிற்கு சென்று வந்ததன் மூலம் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

11 new corona infections in victoria due to social outbreak school closed,விக்டோரியாவில் Barwon Heads பிரைமரி பள்ளியில் தொற்று பாதிப்பு உறுதியானதை அடுத்து அந்த பள்ளி மூடப்பட்டது. இதைப்போன்று Bacchus Marsh Grammar பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு பயிலும் ஆயிரம் மாணவர்கள் உடனடியாக வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். குறிப்பிட்ட பள்ளி ஆசிரியர் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் Carlton-Geelong ஆகியவை தொற்று பரவல் மையங்களாக கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு சென்று வந்தவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் பரிசோதனைகள் மேற் கொள்ளுமாறு விக்டோரியா சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அதே நேரத்தில் விக்டோரியா சுகாதாரத்துறை முகக்கவசம் அணிவதற்கான பல்வேறு புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு பள்ளிகளிலும் முழுமையாக சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவை சுகாதாரத் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது மேலும் இந்த இடங்கள் தொற்றுப் பரவல் மையங்களாக அறிவிக்கப்படாத என்றும் கூறப்பட்டுள்ளது.

11 new corona infections in victoria due to social outbreak school closedமேலும் இனம் காணப்பட்டுள்ள 130 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் அவர்களுக்கு உடனடியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொற்று பரவல் தொடர்பில் இடங்கள் மற்றும் நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பாதிப்புக்கு உள்ளாகும் பட்டியலில் இருக்கும் நபர்கள் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தீவிர பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட ரெட் சோன்களில் பல்வேறு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் குடும்பமாக வருகை தந்ததே தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க காரணம் என்று விக்டோரிய காவல் மற்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3kmyFJi