Breaking News

ஷ்ரைன் போர் நினைவுச் சின்னத்தில் வானவில் ஒளிரூட்டும் காட்சி ரத்து..!!

பால்புதுமையினரின் சேவையை போற்றும் விதமாக ஷ்ரைன் ஆஃப் ரிமபப்பரன்ஸ் போர் நினைவுச் சின்னத்தில் வானவில் நிறங்களை ஒளிரச் செய்யும் முயற்சிக்கு அச்சுறுத்தல் எழுந்ததை தொடர்ந்து, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

Rainbow lighting display at Shrine War Memorial Cancelled

இதுதொடர்பாக போர் நினைவுச் சின்னத்தின் மேலாளர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட பொருட்காட்சி மற்றும் சிறப்பிக்கப்படும் இறுதி அஞ்சல் சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் போர் நினைவுச் சின்னத்தின் கட்டிடத்தின் மீது வானவில் நிறங்களை ஒளிரச் செய்யும் நிகழ்வும் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rainbow lighting display at Shrine War Memorial Cancelled,ஷ்ரைன் ஆஃப் ரிமபப்பரன்ஸின் தலைமைச் செயல் அதிகாரி ஊடங்களிடம் பேசுகையில், பால்புதுமையினரின் சேவையை பாராட்டும் விதமாக நினைவுச் சின்னத்தை வானவில் நிறங்களில் ஒளிரூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதை தொடர்ந்து நினைவுச் சின்ன கட்டிடத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் எழுந்த அச்சுறுத்தல் காரணமாக வானவில் ஒளிரூட்டும் நிகழ்வு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் ஸ்டீவ் டிமோபௌலோஸ், ஷ்ரீன் போர் நினைவுச் சின்னத்தின் அறங்காவலர்கள், நாட்டின் முக்கியமான பொறுப்பில் உள்ளனர். வானவில் ஒளிரூட்டும் காட்சியை ரத்து செய்தது அவர்களுடைய முடிவு. இதில் அரசு எந்தவிதமான தலையீடும் செய்யவில்லை என்று தெரிவித்தார்.