Breaking News

ஜூலை இறுதியில் உச்சத்தை தொட்ட கொரோனா உயிரிழப்புகள்..!!

ஆஸ்திரேலியா முழுவதும் கொரோனா நோய் கொடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விக்டோரியாவில் கோவிட் வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Corona deaths peak at the end of July

விக்டோரியா மாநிலத்தில் ஜூலை மாதம் 650 பேர் வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் 505 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில் ஓமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு முதன்முதலாக ஜனவரி மாதம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட உயிரிழிப்புகள் தான் புதிய உச்சமாக இருந்தது.

Corona deaths peak at the end of July,ஆனால் ஜூலை மாதம் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகள், அதையும் கடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம், கொரோனா உயிரிழப்புகள் அனைத்தும் பொதுத் தளத்தில் பதிவு செய்யப்படவில்லை என்கிற கருத்தை பலரும் முன்வைத்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய தலைமை சுகாதார அதிகாரி பெரட் ஸ்டட்டன், தற்போது மிகவும் சவாலான நிலை ஏற்படுள்ளது. ஆனால் அதை சமாளிக்கும் விதமான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு வருகிறது. உலகளவில் பல்வேறு நாடுகளில் இதுபோன்ற அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா வகை ஓமைக்ரானின் பிஏ.4.5 மற்றும் பிஏ.5 திரிபுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. நாடு முழுவதும் இந்த வகை கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைய தலைமுறை மற்றும் எதிர்ப்புசக்தி அதிகம் கொண்டவர்கள் இந்த வைரஸுகளால் பெரும் பாதிப்புகளை சந்திக்கவில்லை.

ஆனால் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்கள் மற்றும் முதியோருக்கு இது அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. சமீபமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 80 வயதுக்கு அதிகமானோர் மற்றும் அதை விட வயதுடையோர் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.