Breaking News

போக்குவரத்து விபத்து ஆணையத்துக்கு வாகன ஓட்டியின் விசித்திரமான கோரிக்கை..!!

சாலை விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் நடைமுறையை மறு பரிசீலனை செய்யவேண்டும் என போக்குவரத்து விபத்து ஆணையத்துக்கு கனரக வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

A motorist's strange request to the Traffic Accident Commission

கடந்த 2014-ம் ஆண்டு போர்ட்லாண்டைச் சேர்ந்த ஐயன் மெட்லீ என்கிற ஓட்டுநர் பல்லாராட் என்கிற பகுதியில் கனரக வாகனத்தில் சென்றுள்ளார். அங்குள்ள சாலையின் நடுவே ஒருவர் நின்றுக் கொண்டிருந்தார். எவ்வளவு ஒலி எழுப்பியும் அந்த நபர் நகராதலால், ஓட்டுநர் ஐயன் மெட்லீ கனரக வாகனத்தை சட்டென திருப்பியுள்ளார்.

அப்போது அவருக்கு மன அழுத்தம் அதிகரித்து, முழுமையாக பணியில் ஈடுபட முடியாமல் போயுள்ளது. இதனால் ஓட்டுநரின் தினசரி வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது போக்குவரத்து விபத்து ஆணையம், விபத்துக்கான உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு நடைமுறை மீது மாற்றம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கனரக வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துக்களை விட, பாதசாரிகளால் நேரும் விபத்துகள் தான் அதிகம் என்று அவர் தெரிவித்தார்.

இதன்காரணமாக கனரக வாகன ஓட்டிகள் குற்றமற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டு, விபத்துக்கான முழு காரணத்தையும் அறிந்து ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.