Breaking News

குயின்ஸ்லாந்து முதல் NSW எல்லையுடன் தெற்கு ஆஸ்திரேலியா எல்லை வரை முழுமையாக மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Queensland reopens border with NSW

நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் கடந்த 11 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகாத நிலையில், மாநிலங்களுடனான எல்லைகளை மீண்டும் திறக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை NSW Premier Gladys Berejiklian வரவேற்றுள்ளார்.

குயின்ஸ்லாந்தை தொடர்ந்து நியூ சவுத் வேல்ஸில் உள்ள மக்களுக்காக மாநில எல்லைகளை மீண்டும் திறக்க தெற்கு ஆஸ்திரேலியா முடிவெடுத்துள்ளது. இந்த மாற்றம் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குயின்ஸ்லாந்தின் எல்லை பகுதி வரும் திங்கள்கிழமை முதல் NSW இல் உள்ள அனைத்து மக்களுக்கும் மீண்டும் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியால், மக்கள் மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடைவார்கள் ,என்றும் மக்கள் மீண்டும் ஒன்றிணைவார்கள் என்றும் தான் நம்புவதாக Ms Berejiklian கூறினார்.

புதன்கிழமை இரவு 8 மணி வரை எந்தவித புது பாதிப்பும் இல்லாத நிலையில், பயனாளிகளாக வந்த 3 பேர் மட்டும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. இதனிடையே குயின்ஸ்லாந்து எல்லையை சிட்னியில் பகுதியில் உள்ள 35 இடங்களுடன் மூடப்பட்டதற்கு, டிசம்பர் 20 அன்று நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்வு தான் காரணம் எனவும், இதனால் முழு மாநிலமும் பாதிக்கப்பட வேண்டாம் என்றும் நினைத்ததாக Ms Berejiklian கூறினார்.

Greater Sydney -ல் வெள்ளிக்கிழமை முதல் முகக்கவசம் அணிவது, வீடு மற்றும் பொது இடங்களில் மக்கள் கூடும் தளர்வுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு ஆஸ்திரேலியாவில் இந்த தளர்வுகளும், மாற்றங்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பரிசோதனை 5 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை இருக்கும் எனவும், பரிசோதனையிலன் முடிவைப் பெறும் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களில் சிட்னியில் ஏதாவது புதிய கொரோனா தொற்று பாதிப்பு இருந்தால், இந்த தளர்வு மாற்றத்தை மறுபரிசீலனை செய்யலாம் என தெற்கு ஆஸ்திரேலியா போலீஸ் கமிஷனர் Grant Stevens தெரிவித்தார். மேலும் புதுவகை COVID-19 வைரஸ் தொற்று வெளிநாட்டுகளில் இருந்தால் எல்லைகளை மீண்டும் மூட அதிகாரிகள் தயாராக இருப்பதாக Ms Palaszczuk கூறினார்.

மேலும், ஹோட்டல்களை போலவே முகாம்களில் நல்ல காற்றோட்டமான இடவசதியும் இருப்பதால், ஹோட்டல் தனிமைப்படுத்தலை முகாம்களுக்கு மாற்றுவதற்கான ஒரு திட்டம் இருப்பதாகவும் Ms Palaszczuk கூறினார்.