Breaking News

Queensland தலைவர்கள் விவாதம்-கருணை மரணத்திற்கு ஆதரவாக Annastacia Palaszczuk விவாதித்தார் !

கருணைக்கொலை திட்டத்தை அரசியலாக்கிவிட்டதாக LNP தலைவர் Deb Frecklington குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்த Queensland Premier Annastacia Palaszczuk சனிக்கிழமை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் கருணை மரணம் பற்றி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என் தெரிவித்தார்.

வெள்ளியன்று நடைபெற்ற தலைவர்களின் விவாதத்தில் currubin-ல் காலியான பதவிக்காக Ms Frecklingaton இதை அரசியலாக்கப் பார்க்கிறார் என அவர் கூறினார்.

இதை மறுத்து பேசிய Ms Freclington, தான் இதை அரசியாலாக்கவில்லை வலியுடன் யாரும் மரணிக்கக்கூடாது அவர்களுக்கான நோய்த்தடுப்பு சிகிச்சையை அதிகப்படுத்தலாம் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த Ms Palaszczuk, இந்த பேரிடரில் தனது பாட்டி எப்படி வலியுடன் மரணித்தார் என்பதை தான் அறிந்துள்ளதாகவும் அது வேறு யாருக்கும் நிகழக்கூடாது எனவும் தெரிவித்தார். கருணை மரணம் என்பது தனிப்பட்ட ஒரு மனிதரின் விருப்பமும் அவர் மருத்துவரையும் சார்ந்தது என தெரிவித்தார்.

மேலும் தனது அரசாங்கத்துக்கு எதிராக எந்த ஊழலும் கண்டறியப்படவில்லை, Neman-ன் முந்தைய அரசாங்கம் வேலைகளை குறைத்தது தனது அராசாங்கம் பொதுத்துறையை மேலும் சிறப்பாக்க பல திட்டங்கள் செய்தது பற்றி எதிர்கட்சியிடம் அவர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த எதிர்கட்சித்தலைவர் சுகாதாரத் துறையை திறமைவாய்ந்ததாக மாற்றுவத்றகான தங்கள் கட்சியின் திட்டங்களை எடுத்துரைத்தார்.மேலும் சர்ச்சைகளுக்கு உள்ளான முன்னாள் பொருளாளர் Jackie Trad மீண்டும் அமைச்சரவைக்கு திரும்புவதை நிராகரிக்கும்படி அவர் Premier-ரிடம் கேட்டுக்கொண்டார்.”

ஒருவருக்கொருவர் பாராட்டி பேசும்படி கேட்டதற்கு, “தனது சமூகதிற்காக கடினமாக உழைக்கும் மக்களை premier மதிக்கிறார் என்று Ms Freclington தெரிவித்தார்.அன்பால் வலுவான குடும்பத்தை Ms Freclington மதிப்பதாக Premier தெரிவித்தார்.

Queensland-ல் 3.3 மில்லியன் வாக்காளர்களில் 60 சதவீதம் பேர் வியாழக்கிழமை இரவு வாக்களித்ததாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.