Breaking News

ஹாலிவுட் படங்களை இயக்கும் தமிழர்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழரான ஆலன் இளந்திரையன் ஆறுமுகம் என்கிற ஹாலிவுட் பட இயக்குனரின் முதல் படமே, பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுத் தந்துள்ளது.

உலகத்தரமான படங்களை இயக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக செயல்படும், ஆலன் இளந்திரையன்
முதன் முதலில் இயக்கிய “அய்யய்” என்கிற திகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

Crown wood international film festival, delhi international film festival,
Independent star film fest ஆகியவை சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், international screen award,
International future film award,
New york Cinematography award,
Oregon international film award – US.
என ஏராளமான விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றது.
இந்தியாவின் தேசிய விருதைப் போன்ற பெருமைக்குரிய, ஆஸ்திரேலியாவின் அகாடமி அவார்ட்டுக்கும் ( Australian Academy Awards ) இந்தப்படம் தேர்வாகி உள்ளது.

இண்டிபெண்டண்ட் படமான அய்யய் படத்தை அடுத்து, ARK13 என்கிற பிரமாண்டமான படத்தை ஸ்டுடியோவோடு இணைந்து ஆலன் இளந்திரையன் இயக்க இருக்கிறார்.
இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கேங்ஸ்டார் மூவி.

ஹாலிவுட்டின் பாப்புலர் ரைட்டர் ஜான்கோலி உள்ளிட்ட, உலகத்தரமான ப்ளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றிய சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள்,நடிகர்கள் பலர், இப்படத்தில் இணைந்துள்ளனர்.

இதற்கான திரைக்கதை முழுவதும் வடிவமைக்கப்பட்டு, விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இதனையடுத்து 14 ம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து The Nine Knight’s என்கிற படத்தையும் இயக்குகிறார்.

தமிழர் ஒருவர் உலகளாவிய திரைப்படங்களை உருவாக்கி வருகிறார் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.