Breaking News

இயற்கை பேரிடர்கள் மேலும் தொடரும்-ராய்ல் கமிஷன் எச்சரிக்கை !

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தொடர்ச்சியான இயற்கை பேரிடர்கள் ஏற்படும் என ராயல் கமிஷனின் Bushfire அறிக்கை எச்சரித்துள்ளது. மேலும் இந்த பிரச்சனைகளை அதிகாரிகள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான 80 பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

அதன்படி தேசிய அவசர நிலையை அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது.பாரம்பரிய Bushfire முன்கண்காணிப்பு மாதிரிகள் மற்றும் தீயணைப்பு நுட்பங்கள் குறைவான செயல்திறன் கொண்டவை. பேரழிவு தரும் தீ விபத்துகள் பரவலாக காணப்படும் என்று அறிக்கை எச்சரித்தது.

மேலும் ஒரே சமயத்தில் தொடர்ச்சியான அபாய நிகழ்வுகளையும் எதிர்பார்க்கலாம். உதாரணத்திற்கு கடந்த 12 மாதங்களில் வறட்சி,வெப்ப அலைகள் மற்றும் காட்டுத்தீ விபத்துகள் இருந்தன, அதை தொடர்ந்து கடுமையான புயல், வெள்ளம் மற்றும் தொற்று நோய் ஏற்பட்டது.

அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளுக்கும் பதிலளிக்கும்படி முன்னாள் NSW தலைவர் Greg Mullins அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
தேசிய அளவில் நிலையான காற்றின் தரம் பற்றிய தகவல்களையும் அதனுடன் தொடர்புடைய ஆலோசனைகளையும் மாநிலங்கள் வழங்க வேண்டும் என ஆணையம் தெரிவித்தது.

அனைத்து தரப்பு அரசாங்கங்களும், பழங்குடி மற்றும் பிற சமூகங்களுடன் இணைந்து பேரழிவு மேலாண்மை, உரித்த நடவடிக்கை மற்றும் மீட்பு ஆகியவற்றை உறுதிபடுத்த வேண்டும்

கடந்த கோடை காலத்தில் NSW, விக்டோரியா ACT மற்றும் ஆஸ்திரேலியா முழுவதும் தீ பரவி 10 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் 33 உயிர்களை கொன்றது.10,000 வீடுகள் மற்றும் பிற கட்டுமானங்களை அழித்தது.

80,000-ற்கும் மேற்பட்ட கால் நடைகள் கொல்லப்பட்டன மற்றும் கோடிக்கணக்கான பூர்வீக தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழிந்தன.
அழிவை ஆவணப்படுத்துவது மட்டுமல்ல வனவிலங்குகளின் மீட்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான கூடுதல் பரிந்துரையை எதிர்பார்த்ததாக La Trobe பல்கலைகழக சூழலியல் நிபுணர் Michael Clark தெரிவித்தார்.