Breaking News

Qantas நிறுவனம் 2000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்துள்ளது..இது மிகப்பெரிய அவமானமாக கருதப்படுகிறது !

தொழிற்சங்கத்திலிருந்து கீழ் மட்ட ஊழியர்களை நிராகரித்து பின்னர் 2000 வேலையாட்களை நீக்கம் செய்துள்ளனர் Qantas நிறுவனம். மேற்கொண்டு தங்கள் திட்டத்தை செயல்படுத்த நாடு முழுவதும் உள்ள 10 விமான நிலையங்களில் ஆட்குறைப்பு செய்திருக்கிறார்கள். துப்புரவாளர்கள், சாமான்களை கையாளுகிறவர்கள் உள்ளிட்ட கீழ் மட்ட ஊழியர்கள் மீது ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்குறைப்பு கொரோனா பாதிப்பின் எதிரொலி என்று Qantas உள்நாட்டு மற்றும் சர்வதேச CEO Andrew David தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்கள் தப்பிப்பிழைக்க இத்தகைய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளது மற்றும் சேதம் சரி செய்யவே பல ஆண்டுகள் ஆகும் என்று அறிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று நோயால் நிதி நிலைமையை சரி செய்ய இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று national carrier ஆகஸ்ட் மாதம் கூறிய போது இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகளால் ஆண்டு தோறும் கிட்டத்தட்ட $100 million மிச்சப்படுத்த முடியும் என்று அறிவித்தார்கள்.

விமானம் இழுக்கும் சாதனம் மற்றும் சாமான்களை ஏற்றுதல் போன்ற கருவிகளுக்கு ஆகும் செலவினங்களை தவிர்ப்பதினால் ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட $80 million மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜுலை மாதம் வரை ஆஸ்திரேலியாவிலிருந்து சர்வதேச வெளிநாட்டு பயணம் சாத்தியமில்லை என்று Qantas Flights CEO Alan Joyce தெரிவித்தார். நிறுவன ஒப்பந்தத்தில் விதிமுறைகளின்படி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் Antas தொழிலாளர்கள் சார்பாக ஏலத்தை சமர்பித்தனர்.

சில தனிப்பட்ட விமான நிலையங்களில் இருந்து ஏலம் எடுக்கும் குழுக்களை தயாரிப்பதற்காக கூடுதலாக 23 ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கி விடுவிக்கப்பட்டனர். செவ்வாய்க்கிழமை அன்று Mr. David இதனால் ஒரு குறிப்பிட்ட சேமிப்புகளை செய்ய முடியும் என்று அறிவித்தார். ஆனால் நடைமுறைப்படுத்த முடியும் என்று கோடிட்டு காட்ட தவறி விட்டார். ஏலம் மிகவும் குறைவாக உள்ளது என்று கூறினார்.

நோய் தொற்று தடுப்பூசி எல்லோருக்கும் கட்டாயம் போடப்பட்ட வேண்டும் என்று Qantas Flights CEO Alan Joyce அறிவித்தார். நோய் தொற்று காரணம் காட்டி மொத்தமாக 8500 பேர் வேலை நீக்கம் செய்துள்ளனர் மிகவும் அவமானமாக உள்ளது. இது நோய் தொற்றால் நேர்ந்தது அல்ல என்றும்,வேலையை விட்டு நீக்க Qantas-க்கு இது ஒரு சாக்கு என்று திறமை வாய்ந்த பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்சமயம் 1000 பேர் வேலை இல்லாமல் திண்டாடுகின்றனர். இரண்டாயிரம் ஆஸ்திரேலியர்கள் நம்பிக்கையாக உழைத்ததற்கு இவர்கள் தரும் வெகுமதி என்று Mr. Bruke தெரிவித்தார். உலகளாவிய தொற்று நோய்க்கு நடுவில் எங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று அறிவித்தனர்.