Breaking News

கொரோனா விதி முறைகளை NSW தளர்த்தியதால்,WA எல்லைப்பகுதியை மறுபடியும் திறப்பதை உறுதி செய்தது !

WA அதனுடைய NSW மற்றும் விக்டோரியா மாகாணங்களுக்கு இடையேயான எல்லைகளை மறுபடியும் டிசம்பர் 8-ம் தேதியில் இருந்து திறக்க இருக்கிறது என்பதை Premier Mark McGowan உறுதி செய்தார் .

கொரோனா வைரஸ் காரணமாக ,கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டது. தற்போது NSW மற்றும் VICTORIA மாகாணங்களில் இருந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இருக்க அவசியமில்லை என அவர் அறிவித்தார்.

மேலும் NSW மற்றும் விக்டோரியா மாகாணங்களில் இருந்து வரும் பயணிகள் சுகாதார பரிசோதனை மற்றும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகும் மற்றும் அவர்கள் G2G நுழைவுச் சீட்டில் தங்களுடைய சமீபத்திய பயண விவரங்களை குறிப்பிட வேண்டும். தேவை ஏற்பட்டால் covid பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகும்.

கடந்த 28 நாட்களாக விக்டோரியா மாகாணத்தில் எந்தவித சமூக பரவலும் இல்லை என்பதால் எல்லைகளைத் திறக்கும் தகுதியைப் பெற்றது அதேவேளையில் MS-W கடந்த 20 நாட்களாக எந்தவித சமூக பரவலும் இல்லை. அதேவேளையில் NSW -ல் கடந்த 24 நாட்களாக எந்தவித சமூக பரவலும் இல்லை .

SA தீவிர சமுக பரவலோடு தொடர்ந்து போராடுகிறது. SA-ல் இருந்து வரும் பயணிகள் கடுமையான கொரோனா விதிமுறைகளை பின்பற்றினால் மற்றும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 11 ஆம் தேதி வரை எல்லை கட்டுப்பாட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை.

கட்டுப்பாடு தளர்வுகள் பற்றி அடுத்த வாரம் மறுபடியும் யோசனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர் .இந்த கட்டுப்பாடு ஏற்பாடுகள் பல வகையான மனஅழுத்தங்களை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஏற்படுத்தி இருக்கும். சில நேரங்களில் அதைப் பற்றிய சிந்தனையும் நமக்கு கடினமாக இருந்திருக்கும்.

ஒரு பிரதமராக நான் ஒருபோதும் மாநில எல்லை கட்டுப்பாடுகள் விதிக்க நினைத்ததில்லை. இது ஒரு அசாதாரணமான வருடமாக நமக்கு இருந்திருக்கிறது என்பதை நிச்சயமாக என்னால் தெரிவிக்க முடியும். வழிபாட்டுத் தலங்களில் இரண்டு மீட்டர் சமூக விலகல் விதிகள் மற்றும் 60% கொள்ளளவு கொண்டு இயங்கலாம் என்பதும் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.

WA -ல் நேற்று இரவு மூன்று பேரிடம் புதியதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து வெளிநாட்டு பயணிகளும் விடுதியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 24 நாட்களில் எந்தவித தொற்றும் ஏற்படவில்லை என்பது ஒரு வரவேற்கத்தக்க செய்தியாக இருந்துள்ளது.

Virgin Australia விமானங்கள் விக்டோரியா விலிருந்து மற்றும் NSW லிருந்து ஏறக்குறைய முழு கொள்ளளவு பயணிகளோடு செவ்வாயன்று வந்திறங்கியது. அதுமட்டுமல்லாமல் பல ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த வாரம் பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

ஏறக்குறைய 9000 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். பல நாட்களுக்குப் பின் தங்களுடைய நண்பர்களுடனும் மற்றும் குடும்பத்தினருடன் ஒன்றிணைவதற்கும் மற்றும் விடுமுறையை கழிப்பதற்காகவும் அவர்கள் பயணம் செய்ய இருக்கின்றனர்.

1200 க்கும் மேற்பட்ட Qantas மற்றும் Jetstar குழு உறுப்பினர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என்று Qantas கூறியது.வரும் செவ்வாய் முதல் இரு விமான நிறுவனங்கள் Queensland மற்றும் Sydney,Melbourn இடையே வாரத்திற்கு 420 விமானங்களை இயக்கும் என்று அந்நிறுவனங்கள் தெரிவித்தனர்.

திங்களன்று திரும்பி வந்த வெளிநாட்டு பயணிகளில் ஐந்து கோவிட் -19 வழக்குகள் கண்டறியப்பட்டதாக NSW ஹெல்த் நிறுவனத்தின் Dr Jeremy McAnulty தெரிவித்தார்.திங்களன்று 6635 பேர் மட்டுமே சோதனை செய்யப்பட்ட நிலையில்,வெப்ப வானிலை காரணமாக சோதனைகள் எண்கள் கணிசமாகக் குறைந்துவிட்டன என்றும் கூறினார்.

40,000 பேர் கால்பந்து இறுதி மற்றும் 11,000 Everest குதிரை பந்தயத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர், ஆனால் மிக முக்கியமான மதக் கூட்டங்களுக்கு இன்னும் அதிகபட்சம் 300 பேர் மட்டுமே அனுமதிக்க பட்டுள்ளனர்.3000 பேர் வரை வெளிப்புற இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம், 300 பேர் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.