Breaking News

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மாகாண எல்லைகள் திறப்பு : 143 நாட்களுக்குப் பிறகு எல்லைகள் திறக்கப்படும் நிலையில் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொள்ள திட்டம்

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் 80% பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள நிலையில் மாகாண எல்லைகள் திறக்கும் முடிவை சுகாதாரத்துறை மேற்கொண்டு உள்ளது. அந்த வகையில் கொரோனா நெகட்டிவ் சான்று மற்றும் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் குயின்ஸ்லாந்துக்கு வருகை தருவதற்கான அனுமதியை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.

இதனையடுத்து குயின்ஸ்லாந்து வருவதற்கான விமானங்கள் முழுவதும் முன்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. அந்த வகையில் 10 ஆயிரம் பயணிகள் Jetstar, Qantas விமான சேவை மூலமாக குயின்ஸ்லாந்து வருவதற்கு டிக்கெட் முன் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் முதல் விமானம் Gold Coast பகுதிக்கு வந்து இறங்கிய நிலையில் ஏராளமான நெகிழ்ச்சியான காட்சிகள் அரங்கேறின. மருத்துவ தேவைக்காக பல மாதங்கள் வெளி மாகாணங்களில் தங்கியிருந்தவர்கள், குடும்பத்தை பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்ந்தது அங்கு கண்ணீருடன் கூடிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

Provincial borders open for those vaccinated in the Australian state of Queensland. 143 days after the borders are opened, people plan to travel happily..இதனையடுத்து விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களிலிருந்து இருபத்து எட்டு வழி தடங்களில் 700 விமானங்களை இயக்குவதற்கு Qantas, Jetstar விமானசேவை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அடுத்த வாரம் முதல் வார இறுதி நாட்களில் இயக்கப்படும் சிறப்பு விமானங்களின் எண்ணிக்கையை 1200 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. திங்கள் அன்று ஒரே நாளில் பிரிட்டனுக்கு 6600 பயணிகள் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன இவர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாகவும் பயணத்துக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவிட் நெகட்டிவ் சான்று பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்று குயின்ஸ்லாந்து எல்லைகளுக்குள் வாகனங்கள் பயணிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பல்வேறு மாகாணங்களில் இருந்து வருகைதரும் பயணிகளும் தயாராகி வருகின்றனர்.

சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருந்து மட்டும் குறைந்தது 50 ஆயிரம் வாகனங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்ப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வாகனங்களில் பயணித்து குயின்ஸ்லாந்து வருவோரும் இரண்டு டூல்ஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் கோவிட் நெகடிவ் சான்று வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Link Source: https://bit.ly/31THd33