ஈரானுடனான அணுசக்திப் பேச்சு வார்த்தைகளில் இழுபறி நீடித்து வரும் நிலையில், பிராந்திய பகுதியில் உறவை பலப்படுத்தும், இராஜதந்திரத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய அமீரகத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.
அபுதாபிக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்ளவிருக்கும், திரு பென்னட், அங்கு பட்டத்து இளவரசர் முகமது பின் சயீதை சந்திக்கிறார், இது இஸ்ரேலை பொருத்தவரை ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இஸ்ரேலும், ஐக்கிய அமீரகமும், டிரம்ப் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்ட அபிரகாம் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இது பஹ்ரைன், சூடான் மற்றும் மொராக்கோ ஒப்பந்தங்களை ஒத்தது.
இஸ்ரேலும் ஐக்கிய அமீரகமும் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து நீண்டகாலமாக பொதுவான கருத்தைகொண்டுள்ளன. இளவரசர் பின் சயீத் உடனான சந்திப்பின் போது, “இரு நாடுகளுகளின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் பொருளாதார மற்றும் பிராந்திய பிரச்சினைகள்” பற்றி அவர் விவாதிப்பார் என்று திரு பென்னட்டின் அலுவலகம் தெரிவித்துள்ளது. தனது பதவிகாலத்தில் ஐக்கிய அமிரகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இஸ்ரேலிய பிரதமர் பென்னட் ஆவார்.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்ததிலிருந்து ஈரான் அதன் அணுசக்தி நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. ஒப்பந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியங்களை கையிருப்பில் வைத்துள்ளது. இந்நிலையில் பென்னட்டின் இப்பயணம் வெற்றி பெற்றால், அவரது தலைமை பண்பு இன்னும் கேள்விக்குறியாக்கட்டு வரும் நிலையில், இது அவரது சொந்த நாட்டில் அவரது செல்வாக்கை அதிகரிக்கும்.
Link Source: https://ab.co/31Yp986