Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கான கால நிர்ணயம் நீட்டிப்பு : பிப்ரவரி 5ஆம் தேதி எல்லைகளை திறக்கவும் ப்ரீமியர் Mark McGowan முடிவு

Extension of Covid vaccine deadline in Western Australia. Premier Mark McGowan opens borders on February 5

மேற்கு ஆஸ்திரேலியாவில் கோவில் பாதிப்புகளை தொடர்ந்து மூடப்பட்ட எல்லைகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி திறக்கப்படும் என்றும், தீவுக்குள்ளாகவே மற்றும் ஒரு தீவாக மாறிப்போன விஷயம் பிப்ரவரி 5ஆம் தேதி முடிவுக்கு வரும் என்றும் ப்ரீமியர் Mark McGowan கூறியுள்ளார்.

Extension of Covid vaccine deadline in Western Australia. Premier Mark McGowan opens borders on February 5.அதே நேரத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பு ஊசி செலுத்தியவர்களுக்கான சதவிகிதம் 80% என்ற புதிய மைல் கல்லை எட்டி இருப்பதாகவும் ப்ரீமியர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 5ஆம் தேதி 12 மணிக்கு எல்லைகள் திறக்கப்படும்போது மாகாணத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் 90% பேர் 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பார்கள் என்றும் ப்ரீமியர் Mark McGowan நம்பிக்கை தெரிவித்தார்.

நவம்பர் மாதம் 5 ஆம் தேதியிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் இதுவரை 53 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 220 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் மேற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அமைச்சர் Roger Cook கூறியுள்ளார்.

தாஸ்மானியாவைத் தவிர்த்து மற்ற மாகாண எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ள நிலையில் மேற்கு ஆஸ்திரேலியா அதனை படிப்படியாக தளர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Extension of Covid vaccine deadline in Western Australia. Premier Mark McGowan opens borders on February 5..எல்லைகள் திறக்கப்படும்போது பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன அந்த வகையில் பயணிகள் 2 நோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அதற்கான சான்றிதழை வைத்து இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும், வருகையின் போது ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.

முழுவதும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட வெளிநாட்டு பயணிகள் தனிமைப் படுத்துவதற்காக தேவை இல்லை என்றும், வருகை நாட்களில் விமான நிலையங்களிலேயே மேற்கொள்ளப்படும் கோவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3F8zkWp