Breaking News

ஜப்பான் இளவரசி மகோ அவரின் கல்லூரி காதலனை வரும் அக்டோபர் 26 ஆம் தேதி திருமனம் செய்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Princess Mako of Japan has announced that she will be marrying her college boyfriend on October 26th.

ஜப்பான் பேரசர் நருஹிட்டோ. இவரது தம்பியின் மூத்த மகளும் மகோவும், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கொமுரோவும், 2012 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக பயின்ற போது இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு பின்னாளில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

Princess Mako of Japan has announced that she will be marrying her college boyfriend on October 26thஜப்பான் அரசு குடும்ப விதிப்படி, சாதாரண குடும்பத்தினரை ஒருவர் திருமணம் செய்தால், அரச பட்டத்தை இழக்க நேரிடும். ஆனால், அதனை பொருட்படுத்தாது, காதலுக்காக மகோ அரச பட்டத்தை இழக்கவும் துணிந்தார். அதேசமயம், கொமுரோவின் முன்னாள் காதலியிடம் அவரது தாயார் கடன் வாங்கிய விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததால், அவர்களது திருமணம் தள்ளிப் போனது.

இதனிடையே, மகோவின் தந்தையும் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் மகோ பொது மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று கூறியிருந்தார். பிறகு மகோ சட்டம் பயில்வதற்காக நியூயார்க சென்று தற்போது ஜப்பான் திரும்பியுள்ளார்.14 நாட்கள் தனிமை படுத்துதலுக்கு பிறகு அவர் அக்டோபர் 11 வெளியில் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Princess Mako of Japan has announced that she will be marrying her college boyfriend on October 26th,மேலும், அரச குடும்பத்தை விட்டு செல்லும் பெண், அரச பட்டத்தை இழப்பதுடன் அவருக்கு இழப்பீடும் வழங்கப்படும். ஆனால், மக்கள் வரிப் பணத்தில் தரப்படும் சுமார் 1.35 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை தனக்கு வேண்டாம் என்றும் இளவரசி மகோ தெரிவித்து விட்டார். மகோ – கொமுரோ திருமணம், அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருமணத்திற்கு பிறகு அவர்கள் அமெரிக்காவில் குடியேற உள்ளதாகக் கூறப்படுகிறது. காதலுக்காக இளவரசி பட்டத்தை பெண் துறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Link Source: https://bit.ly/3ivfn2C