Breaking News

குயின்ஸ்லாந்தின் மத்திய மற்றும் தென்கிழக்குப் பகுதியில் இன்று புயலின் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Center for Meteorology has warned that there is a chance of rain due to the storm in the central and southeastern part of Queensland today.

குயின்ஸ்லாந்து பகுதியில் ஏற்படக்கூடிய வளிமண்டல மாறுபாட்டின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

இந்த எச்சரிக்கை வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Brisbane, Sunshine Coast ,Gold Coast பகுதியில் நேற்று புயலின் காரணமாக நேற்று கடுமையான கனமழை பெய்தது.

Center for Meteorology has warned that there is a chance of rain due to the storm in the central and southeastern part of Queensland today,மேலும் Warwick, Toowoomba, Dalby, Stanthorpe, Rolleston, Springsure, Goondiwindi, Carnarvon National Park and Tara போன்ற பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் இந்த பகுதிகளில் 30 மில்லி மீட்டர் முதல் 70 மில்லி மீட்டர் வரைக்கும் மழை பொழிவு இருக்கலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் புயலின் காரணமாக குயின்ஸ்லாந்து பகுதியில் மட்டும் சுமார் 40 ஆயிரம் முறை மின்னல் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக 11 ஆயிரத்திற்கு அதிகமான வீடுகளுக்கு மின் வினியோகம் பாதிக்கப்பட்டதாகவும் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது..

தற்போது மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

புயல் மறைந்த பிறகு வரும் நாட்களில் குயின்ஸ்லாந்து வெப்பநிலை சற்று அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3F8AaCH