Breaking News

கிளாஸ்கோவில் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு : ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தான் கலந்துகொள்ள சாத்தியம் இல்லை என தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 மாநாடு கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று பேசுவதற்கான அழைப்பு ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வைரஸ் பாதிப்பின் தீவிரம் இன்னும் குறையாத காரணத்தால் பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 6 மாதங்களில் நான்காவது முறையாக 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இதனால் தன்னால் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Canberra நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் என்கிற விவகாரமே மாநாட்டில் கலந்து கொள்வதற்கான முக்கிய தடையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அந்த நாட்களை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் ஆன்லைன் வாயிலாக இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசவிருப்பதாகவும் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Climate Change Conference in Glasgow. Australian Prime Minister Scott Morrison is unlikely to attend.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதேநேரம் கடந்த 6 மாதங்களில் இத்தனை நாட்கள் தனிமைப் படுத்துதல் என்பது பிரதமருக்கு அதிக பளுவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின்னர் விடுதியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள பிரதமர் அங்கேயே செய்தியாளர் சந்திப்பை நடத்தி இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் COP26 பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் ஆஸ்திரேலியா சார்பில் மூத்த அமைச்சர் யாராவது ஒருவர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழுமையாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கான சர்வ தேச எல்லைகள் திறப்பு தொடர்பான விவகாரத்தில் தீவிரம் காட்டி வருவதாகவும் பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார்.

விவசாயம், வர்த்தகம், தாதுக்கள் உள்ளிட்ட விவகாரங்களில் இனி வரும் ஆண்டுகளில் உரிய கவனம் செலுத்தி அது தொடர்பான பணிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கிளாஸ்கோ மாநாடு ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் என்றும், இதன் மூலமாக பல்வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://bit.ly/2ZTF7PM