Breaking News

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை முழுமையாக அழைத்து வருவதற்கு பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவு : ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 250 துருப்புக்கள் ஆப்கனில் முகாம்

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றினர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் வசம் சென்ற நிலையில் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார்.

Prime Minister Scott Morrison orders full evacuation of Australians stranded in Afghanistan. 250 Australian security forces camp in Afghanistan.இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஏராளமானோர் வேறு நாடுகளுக்கு புலம் பெறுவதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்பதற்கு அந்தந்த நாட்டு அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியா அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் தூதரக அதிகாரிகள் பணியாளர்கள் உள்ளிட்டோரை மீட்பதற்காக சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன ஆனால் காபூலில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது விமான நிலையத்திற்கு வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டுள்ளதாகவும் அதே நேரத்தில் 20 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா தனது படைகளை நிறுத்தி இருந்தது வீணாகவில்லை என்பதையும் பிரதமர் ஸ்காட் மோரிசன் மறுத்துள்ளார். அதே நேரத்தில் ஆஸ்திரேலிய பாதுகாப்புப்படை சீருடையுடன் விழுந்த எந்த வீரரின் உயிரும் வீணாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Prime Minister Scott Morrison orders full evacuation of Australians stranded in Afghanista 250 Australian security forces camp in Afghanistanஆஸ்திரேலிய படைகளுக்கு உறுதுணையாக இருந்த அக்கறை சேர்ந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளிலும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதனை ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து உறுதிப் படுத்தி வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். ஆப்கன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருடன், ஆஸ்திரேலியா பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தாலிபான்களின் வசம் ஆப்கானிஸ்தான் வந்துள்ள நிலையில் அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது முற்றிலும் சீரழிந்து விட்டதாக மோரிசன் கவலை தெரிவித்தார்.

இதே போன்று அமெரிக்கா இங்கிலாந்து ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப்படை துருப்புகள் அங்கு இருப்பவர்களை பத்திரமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் தனது படைகளை முழுவதுமாக திரும்பப் பெற்றுக்கொண்ட நாடுகள் மீண்டும் அந்த பகுதிகளுக்கு பாதுகாப்பு படை வீரர்களை அனுப்ப எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

Link Source: shorturl.at/nszB5