Breaking News

20 ஆண்டுகளுக்கு பின்னர் தாலிபான்களின் வசம் வந்த ஆப்கானிஸ்தான் : அமெரிக்காவின் நடவடிக்கையை விமர்சிக்கும் சீனர்கள்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெற்ற பின்னர் தாலிபான்கள் தீவிரமாக போரிட்டு அந்நாட்டை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். தாலிபான்களுக்கு பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவும் நேசக்கரம் நீட்டி உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தை சீனாவைச் சேர்ந்த இணையவாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று அங்கு நடைபெற்ற ஆட்சி மாற்றத்தை விட மிக எளிதான முறையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி மாற்றம் நடைபெற்று விட்டதாக சமூக வலைதளங்களில் சீனாவைச் சேர்ந்தவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Afghanistan occupied by Taliban 20 years later. Chinese criticizing US action.20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்கா செய்ய முடியாதது 20 நாட்களில் தாலிபான்கள் செய்து விட்டதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அதேபோன்று 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்த அமெரிக்காவை போல சீனா எதையும் செய்யவில்லை என்றும், ஆப்கானிஸ்தானோடு சீனாவுக்கு எந்த பகையும் இல்லை என்றும் ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் உடன் சீனா நட்புறவு கொள்வதை பார்ப்பதற்கு அமெரிக்கா தவித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.

20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகளின் அவலம் குறித்தும் தாலிபான்களின் பின்னணி, பலம் குறித்தும் ஒப்பீடு செய்து பல்வேறு விமர்சனங்களை சீனாவைச் சேர்ந்தவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Afghanistan occupied by Taliban 20 years later. Chinese criticizing US action..ஆப்கனை பொருத்தவரை அமெரிக்காவின் அணுகுமுறையிலிருந்து முற்றிலும் வேறாக பல்வேறு ஆலோசனைகளை சீனா தாலிபான்களுக்கு வழங்கும் என்றும் அது நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என்றும் குளோபல் டைம்ஸ் நாளேடு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் செயல்பாடுகள் ஆப்கன் அரசு படைகளுக்கு அமெரிக்கா செய்த உதவிகள் மிகப்பெரிய போர் எதுவும் நடைபெறாமல் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய விவகாரம் என பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு சீன நாளேடுகள் மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Link Source: shorturl.at/pzA12